நான் கர்ப்பமாக இருக்கிறேன்..! ஆனாலும்..? கடத்தப்பட்ட மைனா நந்தினியின் கணவர்..! நள்ளிரவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்! வீடியோ உள்ளே!

கணவரின் பிறந்தநாளன்று பிரபல சீரியல் நடிகை அவரை கடத்தி சென்ற சம்பவமானது ஊடகங்களில் வைரலாகி வருகிறது.


சின்னத்திரை உலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நந்தினி. தமிழகம் முழுவதிலும் இவர் "மைனா" என்ற பெயரில் புகழடைந்துள்ளார். இவர் யோகேஸ்வரன் என்ற மற்றொரு சீரியல் நடிகரை சென்ற ஆண்டு நவம்பர் மாதத்தில் திருமணம் செய்து கொண்டார். இருவரும் தொடர்ந்து சின்னத்திரையில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நந்தினி கர்ப்பமாகவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், சமீபத்தில் நந்தினியின் பிறந்தநாள் வந்துள்ளது. அன்று யோகேஸ்வரன் அவருக்கு சர்ப்ரைஸ் அளித்து பரிசு கொடுத்துள்ளார். நந்தினி தன்னுடைய பிறந்தநாள் அன்று மிகவும் மன மகிழ்ந்து போனார் என்று அவருடைய தோழிகள் கூறியுள்ளனர். 

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் யோகேஸ்வரனின் பிறந்த நாள் வந்துள்ளது. தான் கர்ப்பமாக இருப்பதையும் கண்டுகொள்ளாமல் நந்தினி தன்னுடைய கணவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். அதன்படி யோகேஸ்வரன் கண்களை மூடி காரில் கடத்தி சென்றார்.

ஒரு குழந்தைகள் நல்ல காப்பகத்திற்கு அவரை அழைத்து சென்று அன்று முழுவதும் அங்கிருந்த குழந்தைகளுடன் இருவரும் விளையாடிக்கொண்டிருந்தனர். இந்த செய்தியை நந்தினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டிருந்தார்.

அவரது வீடியோவை பார்த்த பலரும் நந்தினியின் இந்த முயற்சிக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். இந்த செய்தியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.