ரூ.21 லட்சம் பரிசு! சென்னை தமிழனை கவுரவித்த ஃபேஸ்புக்! ஏன் தெரியுமா?

சென்னையை சேர்ந்த பிரபல வலைதள பாதுகாப்பு ஆய்வாளர் இன்ஸ்டாகிராமில் இருந்த பக்கை கண்டுபிடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.


சென்னையை சேர்ந்தவர் லக்ஷ்மன் முத்தையா. சில மாதங்களுக்கு முன்னர் பேஸ்புக் செயலியில் இருந்த ஒரு பக்கை கண்டுபிடித்து அதனை ஃபேஸ்புக் நிறுவனத்திடம் பதிவு செய்தார். இதற்காக இவருக்கு 30,000 அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்பட்டன.

அதேபோன்று தற்போது இன்ஸ்டாகிராம் செயலியில் ஏற்பட்ட ஒரு பக்கை கண்டுபிடித்து அந்த நிறுவனத்திடம் பதிவு செய்துள்ளார். இந்த பக் என்னவென்றால், ஒவ்வொரு பயனருக்கும் ஒரு குறிப்பிட்ட அடையாள ஐ.டி வழங்கப்படும். இது ஒவ்வொருவருக்கும் மாற்றப்படும். இதன் மூலமே ஒருவருடைய அடையாள ஐ.டி.யை வைத்துக்கொண்டு இன்னொருவரால் ஊடுருவ இயலாது. ஆனால் தற்போது இந்த பிரத்யேக பாதுகாப்பில் பழுது ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் யாருடைய தகவல்களையும் அவர்களின் அனுமதியின்றியே பிறரால் உபயோகப்படுத்த படலாம் என்ற அபாயகரமான நிலை உருவாகியுள்ளது.

இதனை லக்ஷ்மன் முத்தையா இன்ஸ்டாகிராம் நிறுவனத்திடம் ரிப்போர்ட் செய்தார். இது உண்மை என்பதை அறிந்த இன்ஸ்டாகிராம் நிறுவனம் இதனை சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் இதனை கண்டுபிடித்த லக்ஷ்மன் முத்தையாவுக்கு 10,000 அமெரிக்க டாலர்களை பரிசாக வழங்கியுள்ளது.

ஓரிரு மாதங்களில் இரண்டு பெரிய செயலிகளின் பாதுகாப்பு ஓட்டைகளை கண்டுபிடித்த பெருமை தமிழினத்திற்கே சாரும் என்று கூறினால் அது மிகையாகாது.