ஒரு வருடமாக ரேப் செய்தார்! விரைவில் வீடியோ வெளியிடுவேன்! சட்டக்கல்லூரி மாணவி திகுதிகு பேட்டி!

பாஜக தலைவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக தகவல் வெளியாகிய சம்பவமானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


பாஜக தலைவர்களுள் மிகவும் முக்கியமானவர் சின்மயானந்த். இவர் பல கல்லூரிகளை நடத்தி வருகிறார். இவருடைய கல்லூரியில் பயிலும் மாணவிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். 

பாதிக்கப்பட்ட மாணவி ஃபேஸ்புக்கில் சின்மயாநந்த் மீது புகார்களை பரப்பினார். அந்த பெண் மாயமாகிவிட்டார். இந்நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி காவல்துறையினர் அந்த பெண்னை தேடி வந்தனர்.

தன்னுடைய நண்பருடன் அந்த பெண் ராஜஸ்தானில் தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளார். காவல்துறையினர் தேடி அலைந்ததில் அந்த பெண்ணை கண்டு பிடித்தனர்.  உடனடியாக அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த பெண் கூறுகையில், " என்னை முதன்முதலில் சின்மயாநந்த் பாலியல் வன்கொடுமை செய்தபோது காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்.

ஆனால் என்னை கொன்று விடுவதாக மிரட்டினர். அதனால் ஃபேஸ்புக்கில் பதிவு செய்த உடனே நான் தலைமறைவாகி விட்டேன். மேலும் என்னுடைய விடுதி அறையை சீல் வைத்துள்ளனர். அதனை ஊடகத்தின் முன்னர் திறக்க வேண்டும்" என்று கூறினார்.

சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு அந்த பெண்ணிடம் வாக்குமூலத்தைப் பெற்றுக்கொண்டனர். சின்மயாநந்த் மீது எந்நேரத்திலும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த சம்பவமானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.