இனி டெஸ்ட் போட்டிகளில் களம் இறங்கப்போவதில்லை! தென் ஆப்ரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த டேல் ஸ்டெயின்!

தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டைன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் .


தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் இதுவரை 93 வது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி , 439 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் . கடந்த சில வருடங்களாகவே காயத்தால் அவதிப்பட்டு வரும்  டேல் ஸ்டைன் கடந்த ஒரு சில வருடங்களாக குறைவான கிரிக்கெட்  போட்டிகளிலேயே பங்கேற்று வருகிறார் . 

சமீபத்தில் நடந்த உலக கோப்பை போட்டித் தொடரிலும் ஒரு சில போட்டிகளில் மட்டுமே விளையாடி பின்னர் காயம் காரணமாக உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறினார் .இந்த வருடம் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஆடிய இவர் சில போட்டிகளில் மட்டுமே விளையாடி பின்னர்  காயம் காரணமாக வெளியேறினார் .

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காகவே தென் ஆப்பிரிக்க அணியின் டேல் ஸ்டைன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து  ஓய்வை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .