ஆந்திரா போலீஸ் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய கொலைகார தம்பதி! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சென்னை போலீசின் கெத்து!

10 மாத காலமாக கொலை வழக்கில் சிக்காமல் ஏமாற்றி வந்த கொலைகாரனை காவல்துறையினர் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சேக்காடு என்னும் பகுதியில் ஜெகதீசன் என்பவர் வசித்து வந்தார். இவருடைய மனைவி ஷாலினி. ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார். சுரேஷ்குமாரின் மனைவியின் பெயர் புஷ்பலட்சுமி. இருவரும் ஜெகதீசனின் வீட்டில் வீட்டு வேலை செய்வதற்காக சேர்ந்தனர். சில மாதங்கள் கழித்து பின்னர் சுரேஷ்குமாரும், புஷ்பலட்சுமியும் ஜெகதீஸணையும் ஷாலினியையும் கொலை செய்ய முடிவெடுத்தனர்.

அதன்படி சென்ற ஆண்டு சம்பவத்தன்று இரவு நேரத்தில் இரும்பு ராடால் ஜெகதீசனையும், புஷ்பலட்சுமியையும் கடுமையாக அடித்தனர். இதில் இருவருமே சம்பவ இடத்திலேயே பின்னர் அவர்கள் வீட்டிலிருந்த 12 சவரன் நகை மற்றும் 20 ஆயிரம் பணம் ஆகியவற்றை எடுத்து தப்பியோடிவிட்டனர்.

சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் சுரேஷ்குமார் மற்றும் புஷ்பலட்சுமி மீது சந்தேகம் அடைந்தனர். அவர்களை கடந்த ஓராண்டாக தேடி வருகின்றனர். இந்நிலையில் கொலை செய்த தம்பதியினர் ஹரித்வாரில் தங்கயிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தனிப்படை அமைத்து காவல்துறையினர் இருவரையும் ரயில் மூலமாக கைது செய்து வந்தனர்.

சென்னை வந்தவுடன் காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஆந்திரா மற்றும் விசாகப்பட்டினத்தில் இவர்கள் மீது ஏற்கனவே 21 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். ஆந்திர மாநிலத்தின் குற்றப்பிரிவு சரித்திர பதிவேட்டில் தேடப்படும் முக்கிய குற்றவாளிகளில் இவர்களும் உள்ளனர். மேலும் நீதிமன்றத்தால் தண்டனை அளிக்கப்பட்டு காவல் நிலையத்தில் இருந்து தப்பிச்சென்றவர்கள் என்றும் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

உடனடியாக இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் தண்டனை வழங்கி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.