புதுமனைவியுடன் தேனிலவுக்கு சென்ற கணவன்..! அங்கு பறிமாறப்பட்ட மீன் உணவு..! சாப்பிட்ட பிறகு கணவனுக்கு ஏற்பட்ட பகீர் முடிவு!

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒருவர் திருமணமாகி சில நாட்களே ஆன நிலையில் ஹோட்டலுக்கு சென்று மனைவியுடன் இணைந்து மீன் சாப்பிட்டதும் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அலெக்சாண்டர் ஹால் ( வயது 37) என்பவர் ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா மாகாணத்தில் வசித்து வருகிறார். இவர் கசாண்ட்ரா ஹெரால்ட் என்பவரை தீவிரமாக காதலித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் முடிந்த கையோடு கசான்ட்ரா கர்ப்பமாக இருக்கிறார். இதனால் அந்த தம்பதியினர் இருவரும் இணைந்து தேனிலவுக்கு சென்று இருக்கின்றனர். தேன்நிலவு சென்ற இடத்தில் இருந்த ஹோட்டல் ஒன்றில் இருவரும் உணவருந்தி இருக்கின்றனர்.

அப்போது அலெக்சாண்டர் பாரமுண்டி வகை மீனை  ஆர்டர் செய்து சாப்பிட்டு இருக்கிறார். இந்த மீனை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அலெக்சாண்டருக்கு மூச்சுக் கோளாறு ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்து இருக்கிறார். விழுந்த ஒரு சில வினாடிகளிலேயே அவரது உடல் நீல நிறமாக மாற தொடங்கியுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் அளித்து வரவழைத்திருக்கிறார். பின்னர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அலெக்சாண்டர் கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கினர்.

இருப்பினும் அலெக்சாண்டர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அலெக்சாண்டர் மயங்கி விழுவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்பாக தான் தன்னுடைய மனைவியிடம் தான் சாப்பிட்ட மீன் மிகவும் ருசியாக இருப்பதாக கூறியிருக்கிறார். 

மேலும் தன்னுடைய கணவரின் பிரிவைப் பற்றி அவரது மனைவியிடம் கேட்டபொழுது என்னுடைய கணவர் குழந்தை பெறவேண்டும் என்பதில் மிகவும் ஆர்வம் செலுத்தி வந்தார். அதுமட்டுமில்லாமல் பிரேசில் முந்திரியால் அவருக்கு ஒவ்வாமை இருக்கிறது என்பது எனக்கு தெரியும் ஆனால் பாராமுன்டி வகை மீன் சாப்பிட்டால் ஒவ்வாமை வரும் என்பதை அவர் என்னிடம் கூறவில்லை என்று மிகவும் வருத்தப்பட்டார்.