4 நாளில் முடிந்த ஆட்டம்! 5வது நாளில் மனைவியுடன் கோலி செய்த செயல்! வைரல் புகைப்படம்!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்டில் அபார வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் கரிபியன் தீவில் சுற்றுலா மேற்கொண்டுள்ளனர்.


மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. போட்டி முடிய ஒரு நாள எஞ்சிய நிலையில் இந்தயா வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் பீல்டிங் பந்துவீச்சு என அனைத்திலும் மிகவும் சிறப்பாக செயல்பட்டது. 

இந்த இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் வருகிற 30ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் வீரர்கள் கரிபியன் தீவில் தங்களது நேரத்தை மகிழ்ச்சியுடன் செலவழித்து வருகின்றனர் . விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவும் இந்திய அணி வீரர்களுடன் அந்த தீவுக்கு சென்றுள்ளார் .

கரீபியன் தீவில் போட்டில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தில் அனுஷ்கா சர்மா, விராத் கோலி ,கே எல் ராகுல், ரவிச்சந்திரன் அஸ்வின் , மயங்க் அகர்வால் ஆகியோர் போட்டில் மகிழ்ச்சியாக பயணம் செய்வதுபோல் புகைப்படம் உள்ளது. இந்த புகைப்படத்தை கேஎல் ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த புகைப்படத்தில் "endless blue" எனவும் அவர் கேப்டன் செய்துள்ளார். 

கடலும் சூரிய மறைவும் மிக சிறந்த காம்பினேஷன் என்று அஸ்வின் கேப்டன் செய்து இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .