தமிழகத்தில் மேலும் ஒரு பேனர் விபத்து! பைக்கில் சென்ற டாஸ்மாக் ஊழியருக்கு நேர்ந்த விபரீதம்!

பேணர்‌ கீழே விழுந்ததில் டாஸ்மாக் ஊழியர் ஒருவர் பலியான சம்பவமானது தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பேனர் கீழே விழுந்து பலியான சுபஸ்ரீயின் கதை இன்னும் ஆறாத  நிலையில் பேனர் விழுந்து காயமடைந்த மற்றொரு சம்பவம் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது. வேலூர் மாவட்டத்தின் காவேரிப்பட்டினம் எனும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் டாஸ்மாக் ஊழியரொருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அந்த சாலையில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடக்கவிருந்தது. இந்த திருமணத்திற்காக சாலையோரத்தில் ராட்சத பேணர்கள் வைக்கப்பட்டிருந்தன. அந்த சாலையில் சென்று கொண்டிருந்த டாஸ்மாக் ஊழியரின் மீது ராட்சத பேனர் திடீரென்று கீழே விழுந்தது. 

இதில் அவர் மிகவும் படுகாயம் அடைந்தார். உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். வேலூர் மாவட்டத்திலுள்ள வாலாஜா மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவமானது வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.