இந்திய அளவில் வைரலான டர்ட்டி கஸ்தூரி ஆன்ட்டி..! காரணம் ஒரு அஜித் ரசிகன்! ஏன் தெரியுமா?

நடிகை கஸ்தூரிக்கும் தல அஜித் ரசிகர்களுக்கும் சமூகவலைத்தளங்களில் ஏற்பட்டுவரும் வார்த்தை போர் வைரலாகி வருகிறது.


சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்கு பெயர் போன தமிழ் நடிகைகளில் நடிகை கஸ்தூரியும் ஒருவர்‌. இவர் சில மாதங்களுக்கு முன்னர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் அவர்கூட நடித்திருந்த நடிகை லதா பற்றி தவறுதலாக கூறி சிக்கிக்கொண்டார்.

தற்போது இதுபோன்ற மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். தற்போது இவர் ட்விட்டரில் தல அஜித் ரசிகர்களுடன் கடுமையாக சண்டை போட்டு வருகிறார். அதாவது, "தல அஜித்" புகைப்படத்தை கொண்ட டுவிட்டர் பயனாளர் ஒருவர் மிகவும் தரக்குறைவாக கஸ்தூரியிடம் பேசியுள்ளார். அதற்கு கஸ்தூரி பதிலளிக்கும் போது "ஆன்ட்டி ஓ.கே.வா" என்று கேள்வியை எழுப்பியுள்ளார். அதற்கு உடனே அந்த நபரும் ஓகே என்று கூறியுள்ளார். 

இதற்கு கஸ்தூரி "மாட்டுக்கு சூடு, நல்ல மனுஷனுக்கு சொல்லு!!! பீ தின்னும் புழுவுக்கு எதுவும் இருக்காது. தல அஜித் ரசிகன்னு சொல்லிட்டு அவரோட மானத்தை வாங்காதே. பொண்ணு வேணும்னா வெளியில் தேடாத... உங்க அம்மா சகோதரிங்ககிட்ட போய் கேளுங்க" என்று பதிலளித்திருந்தார்.

இதற்கு அவர் ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களையும் அவமானப்படுத்தும் வகையில், "DIRTY AJITH FANS" என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தினார். இது ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களையும் பெரிதளவிற்கு காயப்படுத்தியது. உடனே அவர்கள், "DIRTY KASTHURI AUNTY" என்ற ஹேஷ்டேக்கை தெறிக்கவிட்டுள்ளனர். இந்த ஹேஷ்டேக் தற்போது இந்திய அளவில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

சமூக வலைத்தளம் முழுவதிலும் இவர்களது சண்டை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.