அந்த 3 நாட்களில் அடிவயிற்றில் வலி..! சமாளிக்க செய்ய வேண்டியது என்ன? இந்த நடிகை சொல்வதை கேளுங்க..!

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் இஷா குப்தா அந்த மூன்று நாட்களில் பெண்களின் அடிவயிற்றில் ஏற்படும் வலியை போக்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் நடிகர் நடிகைகள் தங்களது வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களாகவே நடிகைகள் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் த்ரோ பேக் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றனர்.

பாலிவுட்டில் பிரபல முன்னணி நடிகையாக விளங்கி வரும் நடிகை இஷா குப்தா ராஸ் 3, ரஷ்டம், டோட்டல் தமால் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை இஷா குப்தா எப்போதுமே கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். லாக்டவுன் நேரத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வந்த நடிகை இஷா குப்தா அவ்வப்போது யோகா செய்யும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் நடிகை இஷா குப்தா தற்போது பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் யோகா செய்யும் புகைப்படங்களை தற்போது வெளியிட்டு இருக்கிறார். பலவிதமான யோகா செய்யும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நடிகை இஷா குப்தா , பெண்கள் மாதவிடாய் காலங்களில் இதுபோன்ற யோகா செய்துவந்தால் அவர்களின் அடிவயிற்றிலிருந்து ஏற்படும் வலியிலிருந்து விடுபடலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நடிகை இஷா குப்தாவின் இந்த யோகா புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.