29 வயது நடிகரிடம் தான் அதை கத்துக்குவேன்..! திருமணமான 33 வயது நடிகையின் விபரீத ஆசை!

பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகரான கார்த்திக் ஆரியன் இடம் , "தீம் தீம் ஸ்டெப்" கற்றுத் தருமாறு ஹிந்தி சினிமாவின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே கூறியுள்ளார்.


ஹிந்தி சினிமாவின் வளர்ந்து வரும் இளம் நடிகரான கார்த்திக் ஆரியன் பதி பத்தினி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். 

இந்த திரைப்படத்தில் இடம்பெறும் தீம் தீம் என்ற பாடலில் வரும் பாடல் காட்சிகள் மற்றும் நடனம் ஆகியவை ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்டு உள்ளன. ஆகையால் இணையத்தில் "தீம் தீம் சேலஞ்ச் " வைரலாக பரவி வருகிறது.

 பலரும் இந்த சேலஞ்சை ஏற்றுக்கொண்டு அந்தப் பாடலில் வரும் நடன காட்சிகளை போன்று நடனமாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த நடன சவால் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.


இந்த நிலையில் ஹிந்தி சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோனே , இந்த "தீம் தீம்" சேலஞ்சை ஏற்றுக்கொள்வதாகவும் ஆகையால் அந்த பாடலின் நடன காட்சிகளை போன்று தான் நடனமாடுவதற்கு ஏதுவாக நடிகர் கார்த்திக் அதனை கற்பித்து தருமாறும் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றின் மூலம் கேட்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் கார்த்திக் ஆரியன் , நடிகை தீபிகா படுகோனேவிருக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என்று ஆர்வமாக எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.