கர்ப்பமான 35 வயது விதவைப் பெண்! குழந்தை பிறந்த பிறகு நடந்த விசாரணை! அப்போது வெளியான திடுக் தகவல்!

நாக்பூரை சேர்ந்த 35 வயது உடைய விதவைப்பெண் கர்ப்பமாகி குழந்தை பெற்ற சம்பவம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், காவல்துறை விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


நாக்பூரை சேர்ந்த 35 வயது உடைய பெண்ணின் கணவர் சில வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துவிட்டார். அந்த பெண் தனது இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.  

இந்நிலையில். அவர் கர்ப்பமாகி , இரண்டு வாரங்களுக்கு முன்னர் மருத்துவமனையில் குழந்தையும் பெற்றெடுத்தார். இதற்கிடையில், அந்த பெண்ணிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் விதவை பெண் எப்படி கர்ப்பமாக முடியும் என சந்தேகப்பட்டு காவல்துறையினர்க்கு தகவல் கொடுத்தனர். இந்நிலையில், காவல்துறையினர் வந்து விதவைப்பெண்ணிடமும், அவர் மைத்துனரிடமும் விசாரணை நடத்திய போது பல திடீர் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

காவல் துறையினர் விசாரணையில், கடந்த பிப்ரவரி மாதம் விதவை பெண் வீட்டில் தனியாக இருந்த போது அவினாஷ் என்ற இளைஞர் அந்த பெண்ணை வீட்டில் புகுந்து பலாத்காரம் செய்துள்ளான். இதனை அறிந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் மைத்துனர், அவனை பிடித்து அடித்தார், ஆனால் காவல் துறைக்கு எவ்வித புகாரும் அளிக்கவில்லை.

புகார் அளிக்கப்படாத நிலையில், மருத்துவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், தற்போது விதவையை பலாத்காரம் செய்த அவினாஷை கைது செய்துள்ளோம், அவனை காவலில் வைத்து 28ஆம் திகதி வரை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.