நிற்க கூட முடியாத கூட்டம்! ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த 22 வயது இளம் பெண்! நொடியில் நேர்ந்த கோரம்! பதைபதைக்க வைத்த சம்பவம்!

மகாராஷ்டிராவில் ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்த இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


மகாராஷ்டிராவில் உள்ள தாம்பிவெளி எனும் பகுதியை சேர்ந்த சார்மி பிரசாத் என்னும் இளம்பெண் நேற்று காலை தாம்பிவெளியிலிருந்து கோபார் பகுதிக்கு செல்வதற்காக புறநகர் ரயிலில் ஏறியுள்ளார்.  

அப்போது சாஸ்திரி நகர் அருகே சென்று கொண்டிருக்கையில் திடீரென ஓடும் ரயிலில் இருந்து தவறுதலாக கீழே விழுந்துள்ளார். இதனால் பலத்த காயம் உடல் முழுவதும் ஏற்பட்டது.  

உடனடியாக அருகில் இருந்த ரயில்வே காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் சார்மி பிரசாத் உயிரிழந்துள்ளார். 

இது குறித்து வழக்குப்பதிவு செய்த மஹாராஷ்டிரா காவல்துறை மற்றும் ரயில்வே காவல்துறையினர் பிரேத பரிசோதனை முடித்து விட்டு அவரது உடலை குடும்பத்தினருக்கு ஒப்படைத்தனர்.  

மகாராஷ்டிராவில் நாளுக்குநாள் ரயிலிலிருந்து தவறி விழும் விபத்துகள் அதிகரித்து கொண்டே வருவதால் அது குறித்து நடவடிக்கை எடுக்கவும் காவல்துறையினர் ரயில்வே காவல்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர்.