ஆட்டிச மாணவனுடன் நட்பு..! சக மாணவனுக்குக் குவியும் பாராட்டு, வைரலாகும் புகைப்படம்

2 சிறுவர்கள் கையை பிடித்துக்கொண்டு பாசமான முறையில் பாசமான முறையில் பள்ளிக்கு சென்ற புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


அமெரிக்காவில் விசிட்டா எனும் பகுதி உள்ளது. இங்கு 14-ஆம் தேதியன்று மின்னேஹா எனாற பள்ளியொன்று திறக்கப்பட்டது. இங்கு காணர் என்ற ஆட்டிசம் பாதிக்கப்பட்ட சிறுவன் சேர்ந்தார். அவர் ஒரு மூலையில் அழுது கொண்டிருந்த போது, கிறிஸ்டியன் மூர் என்ற  8 வயது சிறுவன் கையை பிடித்துக்கொண்டு காணரை அழைத்து சென்றார். 

இதனை புகைப்படம் எடுத்த சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தனர். இதுகுறித்து கிறிஸ்டியன் மூரின் தாயார் கூறுகையில், " 2 குழந்தைகளுக்குள்ளும் நல்ல பிணைப்பு ஏற்பட்டுள்ளது. கிறிஸ்டியன் மூர் போன்ற மகனை பெற்றதற்கு நான் பெரும் பாக்கியம் செய்திருக்க வேண்டும்" என்று ஃபேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார்.

அதற்கு பதிலளித்த காணரின் தாயார், "சற்று வித்தியாசமான மனநிலையை கொண்டுள்ளதால் என்னுடைய மகன் பள்ளியில் சிரமப்படுவானென்று எண்ணியிருந்தேன். ஆனால் உங்களுடைய மகன் என்னுடைய கவலைகளை தவிடுபுடியாக்கி விட்டான். உங்கள் குழந்தைக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்" என்று பதிவு செய்திருந்தார்.

இந்த புகைப்படம் அமெரிக்காவில் மிகவும் வைரலானது. செய்தியாளர்கள் காணரை சந்தித்தபோது, "நான் ஓரமாக நின்று அழுது கொண்டிருந்தேன். கிறிஸ்டியன் என்னிடம் வந்து அன்பாக பேசினான். என் கையை பிடித்து வகுப்பறைக்கு அழைத்து சென்றான் இதனை கண்டவுடன் நான் மேலும் அழத்தொடங்கினேன்" என்று கூறினான்.

இந்த சம்பவமானது அமெரிக்காவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது