ரூ.100 அல்லல இனி ரூ.1000! இளசுகளுக்கு அதிர்ச்சி கொடுத்த சென்னை போலீஸ்!

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்வோருக்கு அபராத தொகையை ரூ 100 லிருந்து 1000 உயர்த்தி நாடாளுமன்றத்தில் ஒரு புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் இச்சட்டமானது விரைவில் அமலுக்கு வரும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இந்தியாவில் மட்டுமே சாலை விபத்துகளில் அதிகப்படியான உயிரிழப்புகள் நிகழ்கிறது என ஒரு கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. அதில் பெரும்பாலானவர்கள்  இளைஞர்களே! இளைஞர்கள் வாகனத்தை வேகமாக ஓட்டுவது வழக்கமாக கொண்டுள்ளார். எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளாகி தலையில் அடிபட்டு அதிக அளவு உயிரிழப்புகள் நிகழ்கிறது.

இதை கருத்தில் கொண்டு இந்திய அரசாங்கம் அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற புதிய சட்டத்திருத்தத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது வரை ரூ 100 அபராதம் விதிக்கப்பட்டு வந்தது இந்நிலையில் புதிதாக உருவாக்கப்பட்ட சட்டத்திருத்தத்தின்படி ரூ1000 அபராதமும் வசூலிக்கப்படும் என புதிய சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளனர்.

இந்நிலையில் அது கூடிய விரைவில் அமலுக்கு வரும் என சென்னை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. மற்றும் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து ஒருவரும் கட்டாய ஹெல்மெட் அணிய வேண்டும் எனவும் சட்டத்தில் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இருவரும் தலைக்கவசம் அணிந்தால் பெரும்பாலான விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகள் தடுக்கப்படும் என்ற அடிப்படையில் இந்த சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளனர்.

அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற அடிப்படையில் அபராத தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரு சக்கர வாகனத்தில் ஏற்படும் விபத்து காரணமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் அரசாங்கத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அனைவரும் போக்குவரத்து விதிகளை மதித்து விழிப்புடன் வாகனத்தை ஓட்ட வேண்டும் என சென்னை பெருநகர போக்குவரத்து துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.