அப்ரைசல்னு சொல்லி பாலியல் அத்துமீறல் பண்றாங்க..! புகார் கூறிய சென்னை TCS பெண் ஊழியருக்கு ஏற்பட்ட விபரீதம்!

சென்னை: மேனேஜர் மீது பாலியல் புகார் கூறியதற்காக டிசிஎஸ் பெண் ஊழியர் டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார்.


டிசிஎஸ் எனப்படும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் சென்னை மண்டலத்தில் பணிபுரிபவர் ரேவதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், கடந்த 2019 ஆண்டு ஆகஸ்ட் மாதம், அப்ரைசல் மீட்டிங்கிற்காக, பிரிட்டனுக்கு வரவழைக்கப்பட்டுள்ளார். அங்கே, அவரை குவாலிட்டி மேனேஜர் நேர்காணல் செய்துள்ளார். இருவரும்  தனியறையில் இருந்த நிலையில், திடீரென ரேவதியை மேனேஜர் டேமேஜ் செய்துள்ளார். அதில் இருந்து முடிந்தவரை அவர் தப்ப முயன்றுள்ளார்.

இந்நிலையில், தனக்கு நேர்ந்த  விபரீதம் பற்றி ரேவதி உயர் அதிகாரிகளிடம் புகார் கூறியிருக்கிறார். ஆனால் யாரும் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து, காஞ்சிபுரத்தில் உள்ள தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதிகளிடம், நிறுவனமே இதுபற்றி தனிக்குழு அமைத்து விசாரித்து வருவதாகவும், இந்த குற்றச்சாட்டு பற்றி போதிய ஆதாரம் கிடைக்கவில்லை எனவும் , டிசிஎஸ் தரப்பில் விளக்கம் தரப்பட்டிருக்கிறது.

இதன்பேரில், வழக்கு முடித்து வைக்கப்பட்டுவிட்டதாக,  நீதிபதிகள் அமர்வு குறிப்பிட்டுள்ளது.  இதனை ரேவதி சற்றும் எதிர்பாராத சூழலில், திடீரென அவரை வேறு ஒரு கிளைக்கு பணியிட மாற்றம் செய்து,  டிசிஎஸ் உத்தரவிட்டுள்ளதாம். உரிய நியாயம் கிடைக்காத சூழலில், இப்படி வழக்கில் தோல்வி, டிரான்ஸ்பர்  என அலைக்கழிப்பது வேதனை அளிப்பதாக உள்ளதென்று, சம்பந்தப்பட்ட பெண் ஊழியர் வேதனை தெரிவித்துள்ளார்.