மாமியாருக்குத் தாலி கட்டிய மருமகன். என்ன காரணம் தெரியுமா..?

தாய் போன்று நினைக்க வேண்டிய மாமியாருடன் தகாத உறவு வைத்திருந்த மருமகனுக்குத் தக்க தண்டனை கிடைத்திருக்கிறது. அதாவது, அவர்களுடைய தகாத உறவு அம்பலமானதால் மாமியாருக்கும் தாலி கட்டவேண்டிய அவசியம் மருமகனுக்கு நேர்ந்துள்ளது.


தாய் போன்று நினைக்க வேண்டிய மாமியாருடன் தகாத உறவு வைத்திருந்த மருமகனுக்குத் தக்க தண்டனை கிடைத்திருக்கிறது. அதாவது, அவர்களுடைய தகாத உறவு அம்பலமானதால் மாமியாருக்கும் தாலி கட்டவேண்டிய அவசியம் மருமகனுக்கு நேர்ந்துள்ளது.

பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த கீதா தேவி (55) – திலேஷ்வர் தர்வே (60) தம்பதியின் மகளை சிக்கந்தர் யாதவ் (40) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் சிக்கந்தர் யாதவின் மனைவி உடல்நலக் குறைவால் காலமானார்.

அதனால் தனது மாமியார் வீட்டிற்கு தனது இரண்டு குழந்தைகளுடன் சிக்கந்தர் யாதவ் குடிபெயர்ந்தார். இந்த நிலையில் மாமியாருக்கும், மருமகனுக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் பல நேரங்களில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உல்லாசமாக இருந்துள்ளனர்

இந்த விவகாரம் கணவர் திலேஷ்வர் தர்வேவுக்கு தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அவர், இருவரையும் கண்டித்தார். ஆனால், அவர்கள் திருந்தியதாகத் தெரியவில்லை.

ஆகவே, விவகாரம் கிராம பஞ்சாயத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவர்கள் மாமியாரையும், மருமகனையும் நேரில் அழைத்து விசாரித்தனர். இருவரும் தங்களுக்குள் இருக்கும் கள்ளக்காதலை ஒப்புக் கொண்டனர். பின்னர் இருவரும் திலேஷ்வர் தர்வேவின் சம்மதத்தின் பேரில், கிராமத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். மாமியாரை மருமகனே திருமணம் செய்து கொண்ட சம்பவம், பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது