கிட்னி பிடுங்க அழைக்கிறார் நித்தியானந்தா

திடீரென கைலாஸாவுக்கு வாங்க என்று மக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் நித்தியானந்தா.


 கைலாஸாவுக்கு இலவச இ-விசா

ஒரு சாமியாருக்குரிய அத்தனை தில்லுமுல்லு இலக்கணங்களும் கொண்ட நித்தியானந்தா இப்போது கைலாஸா எனும் கண்காணாத தீவுக்குள் இருப்பதாக சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்ததாகவும், செத்துப்போனதாகவும் அறிவிக்கப்பட்ட நித்தியானந்தா மீண்டும் இப்போது லைம்லைட்டுக்கு வந்துவிட்டார். தினமும் நித்தியானந்தா பேசுகிறார், ரஞ்சிதா பேசுகிறார். அது மட்டுமின்றி மேலும் சில அழகுப் பெண்களும் கைலாஸாவின் சிறப்பை பேசிக்க்கொண்டே இருக்கிறார்கள்.

இந்த நிலையில் திடீரென கைலாஸாவுக்கு வாங்க என்று மக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் நித்தியானந்தா. அந்த அழைப்பில், ‘உங்கள் வாழ்க்கை பிரச்சனைகளுக்கு நிச்சயமான நிரந்தரமான தீர்வுகளை பெற, கைலாஸாவின் குருமஹாஸன்னிதானம் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் அளிக்கும் ஜீவன் முக்த வாழ்க்கை முறையை வாழுங்கள். ஜீவன் முக்த வாழ்க்கையை வாழ கைலாஸாவின் இ-குடியுரிமை பெறுங்கள். உலகில் இந்துக்களுக்கான முதல் தேசமான கைலாஸாவின் பாகமாக ,இ-குடியுரிமை பெற, இப்போதே பதிவு செய்யுங்கள்’ என்று அன்போடு அழைப்பு விடுத்துள்ளார் நித்தியானந்தா

இப்போது நிறைய பேர் ஆசை ஆசையாக அந்த படிவத்தை பூர்த்தி செய்து அனுப்புகிறார்கள். உங்கள் தொலைபேசி உள்ளிட்ட பல தகவல்கள் மூலம் பணம் பிடுங்கும் முயற்சி தான். ஆனாலும் சிலர், நம்மிடம் பணமா இருக்கிறது. சும்மா கூப்பிட்டுப் போனால் ஜாலியாகப் போய் வரலாம் என்று நினைக்கிறார்கள்.

உங்களிடம் ஒன்றுமே இல்லை என்று நினைக்காதீர்கள். இரண்டு கிட்னி, இதயம், கல்லீரல், கண் என்று எத்தனையோ உறுப்புகள் இருக்கின்றன. கைலாஸாவுக்கு அழைப்பதாகச் சொல்லிவிட்டு நிஜமாகவே கைலாசாவுக்கு அனுப்பிவிடுவார், ஜாக்கிரதை.