அலட்சியமாக சாலையை கிராஸ் செய்த டூவீலர்! எதிரே அதிவேகத்தில் பைக்! நொடியில் பறிபோன உயிர்! அதிர்ச்சி விபத்து!

சேலம் மாவட்டத்தில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.


சேலம் மாவட்டம் சிவதாபுரம் அருகே உள்ள திருமலைகிரி பகுதியைச் சேர்ந்த கணேசனும் அவரது பேரன் அரவிந்தும் இருசக்கர வாகனத்தில் சேலம் நோக்கி சென்று கொண்டு இருந்தனர். அப்போது மின்னல் வேகத்தில் எதிரே வந்த இருசக்கர வாகனம் ஒன்று இவர்கள் சென்ற மோட்டார் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் தூக்கி வீசப்பட்டனர். 

இதையடுத்து பொதுமக்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர. ஆனால் சிகிச்சை பலனின்றி கணேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.. விபத்தில் படுகாயமடைந்த அவரது பேரன் அரவிந்த் மற்றும் எதிர் திசையில் மோட்டார் பைக் ஓட்டி வந்த சக்திவேல் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து நடந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாக உள்ளது. இந்த வீடியோ காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். என்னதான் சாலை விதிமீறலுக்கு 10 மடங்கு அபராதம் விதித்தாலும் சென்னை போன்ற மாநகரங்களில் மட்டுமே அதை போலீசாரால் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இன்றும் கிராமங்களில் அனைத்து சாலை விதிகளையும் மீறியத்தான் வாகனம் ஓட்டிக் கொண்டு இருக்கின்றனர். அதனால்தான் எதிரே வரும் அப்பாவிகளும் உயிரிழக்கின்றனர். சாலை விதிமீறல் விழிப்புணர்வுகள் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, மாநகர மக்களுக்கு மட்டும் சென்றடைந்தால் போதாது. உசிலம்பட்டி, கொட்டாம்பட்டி மக்களுக்கும் போய்ச் சேரவேண்டும் என்பதே டைம்ஸ் தமிழ் நிர்வாகத்தின் எதிர்பார்ப்பு