கோத்தபய ஜெயிச்சாச்சு! இனி ராஜபக்சே பிரதமர்! தமிழர்கள் ஓட்டுப்போட்ட பிரேமதாசா தோல்விக்குக் காரணம் இதுதான்!

இலங்கை அதிபர் தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கோத்தபய வெற்றி அடைந்திருக்கிறார். இவர்தான், கடந்த தேர்தலில் ராஜபக்சே தோற்றதற்கு முக்கிய காரணம் என்பதை அனைவரும் அறிவார்கள்.


ஆனாலும் எப்படி ஜெயித்தார் கோத்தபய..? கடந்த 5 ஆண்டுகளாக இலங்கையில் வளர்ச்சி என்பது இல்லை. ரூபாய் மதிப்பு அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டது. அதனால் சகல தொழில் நிறுவனங்களுக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

அதனால், கடந்த தேர்தலில் வெறுத்து ஒதுக்கிய கோத்தபய மீது சிங்கள மக்கள் மீண்டும் பாசம் வைத்து விட்டனர். தமிழ் மக்கள் கோத்தபயவை மன்னிக்க இன்னமும் தயாராக இல்லை. அதனால் கோத்தபய வருவதைவிட பிரேமதாச வரலாம் என்று முடிவுக்கு வந்து ஒட்டுமொத்தமாக ஓட்டு போட்டனர்.

ஆனால், சிங்களமக்கள் பிரேமதாச மீது நம்பிக்கை இழந்து ஒட்டுமொத்தமாக கோத்தபய மீது நம்பிக்கை வைத்துவிட்டனர். அதனால் எளிதாக ஜெயித்துவிட்டார் கோத்தபய. இனிமேல் இலங்கையில் அடுத்த பிரதமராக ராஜபக்சே இருக்கும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படும்.  

அப்படியென்றால் தமிழர்கள் நிலைமை..? எப்போதும் போல் மோசமாக இருக்கும் என்பதை மட்டும் உறுதியாக சொல்லிக்கொள்ள முடியும்.