மயங்கி கிடந்த சுர்ஜித் தாயார் கலாமேரி..! அருகில் நின்று சிரித்துக் கொண்டிருந்த நர்ஸ்! வைரலாகும் புகைப்படம்!

சுர்ஜித்தின் அம்மா மேரி சிகிச்சை எடுத்துக்கொண்ட போது அருகிலிருந்த செவிலியர் சிரித்த புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


80 மணி நேர போராட்டத்திற்கு பிறகு 2 வயதான சுர்ஜித் நம்மை விட்டு பிரிந்தார். சுர்ஜித் இறந்த செய்தியை அறிந்தவுடன் திமுக தலைவர் ஸ்டாலின் விமானத்தின் மூலம் திருச்சிக்கு புறப்பட்டார். அவர் நடுக்காட்டுப்பட்டிக்கு சென்றபோது சுர்ஜித்தின் தாயார் மேரி மயக்கத்திலிருந்தார். சுர்ஜித்தின் திருவுருவ படத்திற்கு ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். 

பின்னர் ஆரோக்கியராஜ் மற்றும் மேரியை அவர் சந்தித்து பேச விரும்பினார். ஆனால் குழந்தை கீழே விழுந்ததில் இருந்து தைரியம் உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அவர் மயங்கி இருந்தார். ஸ்டாலின் சென்றபோது அவர் படுத்த படுக்கையாக இருந்தார். அப்போது அவருக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த செவிலியர் ஒருவர் சிரித்துள்ளார். இந்த புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

2 வயது சிறுவன் இறந்த வீட்டில் எப்படி ஒரு செவிலியரால் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது என்று நெட்டிசன்கள் கேள்வியெழுப்பினர். மயங்கிய நிலையில் ஒரு பெண் கிடக்க, நலம் விசாரிப்பதற்காக தமிழகத்தின் மாபெரும் தலைவர் வந்திருக்க ஏன் அந்த செவிலியர் ஏன் இப்படி சிரிக்க வேண்டும் என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.