ஜீப்பை அதிவேகத்தில் ஓவர் டேக் செய்த பைக்! எதிரே அதிவேகத்தில் வந்த சரக்கு ஆட்டோ! கண் இமைக்கும் நேரத்தில் சடலமான இளைஞர்! நெஞ்சை உலுக்கிய விபத்து!

சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற போது ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்திருப்பது ஈரோடு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர் என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வயது 34. இவர் ஈரோடு மாவட்டத்தில் பில் கலெக்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். பணியிடத்தில் இவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது இவர் அதற்கான விசாரணைகளை சந்தித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் இவர் தன்னுடைய சொந்த பணிக்காக அந்தியூரில் இருந்து ஈரோட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவருக்கு முன்னால் ஏடிஎம்-இல் பணம் நிரப்பும் மினி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

அந்த லாரியை மணிகண்டன் முந்த முயன்றுள்ளார். அவ்வாறு முயற்சித்தபோது எதிர்பாராவிதமாக இருசக்கர வாகனம் அவருடைய கட்டுப்பாட்டிலிருந்து விலகியது. அப்போது இருசக்கர வாகனம் அந்த மினி லாரி மீது வேகமாக மோதியுள்ளார். மோதிய அதிர்ச்சியில் தலையில் படுகாயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மணிகண்டன் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தின் சிசிடிவி அருகிலுள்ள கடைகளில் பதிவாகியிருந்தன. இந்த சிசிடிவி கேமரா பதிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. 

இந்த சிசிடிவி கேமரா பதிவுகளை அடிப்படையாகக்கொண்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.