ஐதராபாத்தில் கொடூரம்! அண்ணியை கதற கதற கற்பழித்த 5 சகோதரர்கள்!

ஐதராபாத்தில் ஒரு இளம்பெண்ணின் குழந்தைகளை பக்கத்து அறைக்கு அனுப்பிவிட்டு பெண்ணை உறவினர்கள் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

ராஜஸ்தானில் வசித்த அந்தக் குடும்பம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் தான் ஐதராபாத்துக்கு குடிபெயர்ந்து வந்தது. 25 வயதான அந்தப் பெண்ணுக்கு 2 குழந்தைகள். ஐதராபாத்துக்கு வந்த பின் அந்தப் பெண்ணின் கணவர் ஆட்டோ ஓட்டிவருகிறார். 

இந்நிலையில் அவர்களின் வீட்டுக்கு கணவனின் உறவினர்கள் பலரும் அவர்களின் நண்பர்கள் இருவரும் வந்திருந்தனர். இந்நிலையில் உறவினர்கள் மேலும் சகோதர முறை தானே என்ற நம்பிக்கையில் அவர்களை வீட்டில் விட்டுவிட்டு கணவன் வழக்கம் போல ஆட்டோ ஓட்டச் சென்றுவிட்டார். 

இந்நிலையில் உறவினர்களில் ஒருவன் அந்தப் பெண்ணின் குழந்தைகளை விளையாட்டுக் காட்டி பக்கத்து அறைக்கு அழைத்துச் சென்று வைத்திருந்த நிலையில் மற்றவர்கள் அந்தப் பெண்ணை மாற்றி மாற்றிப் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. 

இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் நடந்ததை வெளியில் சொன்னால் அவரது குழந்தைகளை கொன்றுவிடுவதாக அந்த வெறிநாய்கள் மிரட்டி விட்டுச் சென்றதாகவும் அந்தப் பெண் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் தெரிவித்துளார். 

அந்தப் பெண்ணின் புகாரின் பேரில் பல்வேறு தனிப்படைகளை அமைத்துள்ள போலீசார் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட அனைவரையும் தேடி வருகின்றனர்.