குப்பைத் தொட்டிக்குப் போன புகார் மனுக்கள்

சைதை துரைசாமி மேயரராக அலுவலகத்தில் அமர்ந்தவுடனே பொதுமக்களிடம் ஜோராக மனுக்களை பெறத் தொடங்கினார். நிறைய மனுக்கள் சேர்ந்தன. அத்தனை மனுக்களையும் அதிகாரிகளிடம் கொடுத்து, ‘இந்த மனுக்களை எல்லாம் பதிவுசெய்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அனுப்பி, தீர்வு காண்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்… என்ன நடவடிக்கை என்று எனக்கு அப்டேட் தெரிவிக்க வேண்டும்’ என்று உதவியாளர்களிடம் சொன்னார்.


என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 9

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின், ‘தண்ணீர் தண்ணீர்’ படத்தில் ஒரு காட்சி இடம் பெறும். அமைச்சரிடம் பொதுமக்கள் ஒரு மனு கொடுப்பார். அந்த மனுவை வாங்கி தன் உதவியாளரிடம் அவர் கொடுப்பார். அந்த உதவியாளர் அவரது உதவியாளரிடம் கொடுப்பார். அவர் வாங்கி மற்றொருவரிடம் என்று சில கைகள் மாறி, அந்த இடத்திலேயே குப்பைத் தொட்டிக்குப் போய்ச் சேர்ந்துவிடும். இப்படி, சினிமாவில் காட்டப்படுவது எதுவும் மிகையில்லை என்பதை சைதை துரைசாமி சென்னை மேயராகப் பொறுப்பேற்ற நேரத்தில் அறிந்துகொண்டார்.

சைதை துரைசாமி மேயரராக அலுவலகத்தில் அமர்ந்தவுடனே பொதுமக்களிடம் ஜோராக மனுக்களை பெறத் தொடங்கினார். நிறைய மனுக்கள் சேர்ந்தன. அத்தனை மனுக்களையும் அதிகாரிகளிடம் கொடுத்து, ‘இந்த மனுக்களை எல்லாம் பதிவுசெய்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அனுப்பி, தீர்வு காண்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்… என்ன நடவடிக்கை என்று எனக்கு அப்டேட் தெரிவிக்க வேண்டும்’ என்று உதவியாளர்களிடம் சொன்னார்.

அதைக் கேட்டதும் உதவியாளர்கள் அமைதியாக நின்றார்கள். ஏனென்றால் அதுவரை பொதுமக்களிடம் இருந்து வரும் மனுக்களை ஃபைல் செய்து பாதுகாப்பதும், பதிவு செய்வதும் சென்னை மாநகராட்சியில் பழக்கத்தில் இல்லை.

சில முக்கியமான நபர்கள் கொண்டுவரும் மனுக்கள் மட்டும்தான் நேரடியாக சம்பந்தப்பட்ட அலுவலர் கைக்குப் போகும். அவரும் தேவையான நடவடிக்கை எடுப்பார். அந்த மனுவையும் பாதுகாப்பாக வைப்பது இல்லை. எனவே, சாதாரண மக்கள் தரும் புகார் மனுக்களை வாங்கி எங்காவது வைத்துவிட்டு, அதை அப்படியே மறந்தே விடுவார்கள். இது தான் நடைமுறை.

இதை எப்படி புதிய மேயரிடம் தெரிவிப்பது என்று தெரியாமல் தயங்கி நின்றார்கள். அவர்கள் முகக்குறிப்பை பார்த்ததுமே, இதுவரை என்ன நடைமுறை என்று கேட்டு அதிர்ந்து போனார்.

உடனடியாக, ‘’இதுவரை மனுக்கள் பதிவு செய்யும் பழக்கம் இல்லை என்று நினைக்கிறேன், முதலில் இந்த மனுக்களை பதிவேட்டில் பதிவுசெய்து, எண் கொடுக்க வேண்டும். அதன்பிறகு மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிக்கு அனுப்பி வைத்து, அவரிடம் கையெழுத்து பெற்று, அதனை ஆவணப்படுத்த வேண்டும். அப்போதுதான் மனு எந்தத் துறையில் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடியும்.

அதேநேரம், ’தங்கள் மனு மேல் நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது’ என்ற ஒப்புதல் கடிதம் மனுதாரருக்கு அனுப்ப வேண்டும். அந்த மனு மீது, சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கொண்ட நடவடிக்கை பதிவு செய்யப்பட வேண்டும். அந்த நடவடிக்கை குறித்தும் மனுதாரர்களுக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும்’’ என்று உத்தரவு போட்டார்.

அந்த உத்தரவுக்கு என்ன நிலை ஏற்பட்டது தெரியுமா?