சவுக்கு சங்கர் வீட்டில் கஞ்சா ரெய்டு

தி.மு.க. அரசை அழிக்காமல் விட மாட்டேன் என்று சவால் விட்ட சவுக்கு சங்கருக்கு சிக்கல் மேல் சிக்கல். கைதிகளுக்குள் மோதல் என்று சொல்லி சவுக்கு சங்கருக்கு கையில் மாவுக்கட்டு போடப்பட்டிருக்கிறது. அவரது வீடு, அலுவலகத்தில் கஞ்சா இருக்கிறதா என்று சோதனை நடைபெறுகிறது.


சவுக்கு சங்கர் வீட்டில் கஞ்சா ரெய்டு

தி.மு.க. அரசை அழிக்காமல் விட மாட்டேன் என்று சவால் விட்ட சவுக்கு சங்கருக்கு சிக்கல் மேல் சிக்கல். கைதிகளுக்குள் மோதல் என்று சொல்லி சவுக்கு சங்கருக்கு கையில் மாவுக்கட்டு போடப்பட்டிருக்கிறது. அவரது வீடு, அலுவலகத்தில் கஞ்சா இருக்கிறதா என்று சோதனை நடைபெறுகிறது.

அதோடு அவர் மற்றும் அவர் சார்ந்த நபர்களின் கணக்கு வழக்குகள் தோண்டப்பட்டு மிகவும் சீரியஸாக ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இதில் எத்தனை பேர் சிக்குவார்கள் அல்லது சிக்கவைக்கப்படுவார்கள் என்பது இன்னமும் தெரியவரவில்லை.

சவுக்கு சங்கர் விவகாரத்தில் இளைய பத்திரிகையாளர்கள், மீடியாக்காரர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் நிறைய இருக்கிறது. அதாவது, ஆளும் அரசு, போலீஸ் போன்ற அதிகார அமைப்புகளுக்கு எதிராக ஒருவர் பேசுகிறார், அதற்கு அவர்கள் எந்த விளக்கமும் கொடுக்காமல் அமைதியாக இருக்கிறார்கள் என்றால், பயந்துவிட்டார்கள் என்று அர்த்தம் அல்ல.

சவுக்கு சங்கர் மேலும் மேலும் தவறு செய்யட்டும் என்று காத்திருந்தார்கள். போதிய அளவுக்கு குற்றம் செய்யும் அளவுக்குத் தூண்டினார்கள். எல்லா விஷயங்களும் சரியாக அவர்களுக்குச் சேர்ந்ததும் ஆளை தூக்கிவிட்டார்கள். இது தான் அரச பயங்கரவாதம் என்பது.

எந்த அரசும், அரசியல்வாதிகளும் கையில் பதவியும் அதிகாரமும் இருக்கும் போது இப்படித்தான் நடந்துகொள்வார்கள். இப்போது சவுக்கு சங்கரை யாராலும் காப்பாற்ற முடியாத அளவுக்குப் போயிருக்கிறார். எனவே, கையில் செல்போன் இருக்கிறது என்பதற்காக அரசுக்கு எதிரான கோபத்தை அப்படியே பதிவு செய்துவிடாதீர்கள்.

சரியான ஆதாரங்கள் இருந்தால் அதனை முன் வைத்துப் பேசுங்கள், குற்றம் சுமத்துங்கள், நீதிமன்றத்தை நாடுகள். தனிப்பட்ட முறையில் பலரையும் பகைத்துக்கொண்டால் ஆபத்து என்பதற்கு உதாரணமாக மாறியிருக்கிறார் சவுக்கு.