1 மாதத்தில் பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமரா கட்டாயம்! கெடு விதித்த நீதிமன்றம்! ஏன் தெரியுமா?

தனியார் பள்ளி வாகனங்கள் அனைத்திலும் ஜிபிஎஸ் மற்றும் கண்காணிப்பு கேமரா பொருத்த உச்ச நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் வரும் ஒரு மாதத்திற்குள் இந்த செயல்பாடுகலள் அனைத்து பள்ளிகளும் நிறைவேற்றப்பட வேண்டும் என அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


கடந்த சில மாதங்களுக்கு முன் கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளி பேருந்தில் மாணவி ஒருவர் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் மூலம் பாலியல் வன்கொடுமை செய்ததற்காக அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த பள்ளியின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் பள்ளி வாகனத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என பள்ளியிடம் பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் இது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது அந்த வழக்கில் தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் உள்ள வாகனங்களில் கண்காணிப்பு கேமரா மற்றும் ஜிபிஎஸ் கருவி இணைக்கப்பட வேண்டும் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அதற்கான விசாரணை தொடங்கியது.

இந்நிலையில் அனைத்து தனியார் பள்ளிகளிலும் உள்ள வாகனங்களில் கண்காணிப்பு கேமரா மற்றும் ஜிபிஎஸ் கருவி கட்டாயமாக பொருத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

வரும் ஒரு மாத காலத்திற்குள் அனைத்து பள்ளிகளிலும் உள்ள வாகனங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருக்க வேண்டும் அதை ஆய்வு செய்த பிறகு பள்ளிக்குழந்தைகளை ஏற்ற அந்த வாகனத்தை அனுப்ப வேண்டும் என அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

இதையடுத்து பள்ளி வாகனங்களில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கண்காணிக்க பள்ளியில் தனியே கட்டுப்பாட்டு அறை ஒன்று அமைக்க வேண்டும் எனவும் அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்தால் பள்ளி வாகனங்களில் நடக்கும் முறைகேடுகள் தவிர்க்கப்படும் என தெரிகிறது.