கள்ளப் பண ஒழிப்பும் பிரதமர் மோடியும்! கிழித்து தொங்கவிட்ட RTI !

கருப்புப் பணம், கள்ளப் பணம் வைத்திருப்பவர்கள் மோடியின் ஆட்சியின் கீழ் யாருமே இருக்கமுடியாது, ஓடிப்போய்விடுங்கள் என்று எச்சரிக்கை விடுத்தார்கள்.


அட, இத்தனை நல்லவரா இருக்காரே என்று மக்களும் ஆச்சர்யப்பட்டது உண்மைதான். ஆனால், அந்தக் கள்ளப் பணம் எல்லாம் எங்கே போனது என்பதுதான் ஆச்சர்யமான தகவல். சமீபத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் புனேயைச் சேர்ந்த விஹார் துர்வே என்பவர் தகவல் பெற்றார்.

தேர்தல் சமயத்தில் மார்ச் 2019 -ல் 1,365 கோடி ரூபாய்க்கும், ஏப்ரல் 2019 -ல் 2,256 கோடி ரூபாய்க்கும், ஆக மொத்தம் சுமார் 3,622 கோடி ரூபாய்க்கு ஸ்டேட் பேங்க் மூலமாக தேர்தல் நன்கொடை பத்திரங்கள்-தனிப்பட்ட நபர்களாலும், கம்பெனிகளாலும் வாங்கப்பட்டிருக்கின்றன. இவை எல்லாமே குறிப்பிட்ட ஒரே அரசியல் கட்சிக்கு கொடுக்கவே வாங்கப்பட்டுள்ளது.

சரி, இவ்வளவு பணம் போட்டு நன்கொடை பத்திரம் வாங்கியது யார் என்று கேட்கிறீர்களா? மூச்... இந்தப் பத்திரங்களை வாங்கியது யார் என்றும், கொடுக்கப்பட்டதுயாருக்கு என்றும் தெரிந்துகொள்ளவே முடியாதாம்.

ஏன் அப்படி? ஜனவரி 2018க்கு முன்பு 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் யார் நன்கொடை கொடுத்தாலும் காசோலை மூலமாகத்தான் கொடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. அதை மாற்றியது சாட்சாத் மோடி அரசாங்கம்தான். ஆக, மோடி எத்தனை புத்திசாலித்தனமாக செயல்பட்டிருக்கிறார் என்று புரிந்தால் சரிதான்.