நீயா நானா கோபிநாத் மனைவி இந்த பெண்மணியா? அவர் என்ன தொழில் செய்கிறார் தெரியுமா?

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கோபிநாத் அவர்களின் திருமண புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.


பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் கோபிநாத் ஆவார். இவர் தனது வித்தியாசமான பேச்சாற்றல் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். நீயாநானா மட்டுமல்லாமல் இவர் அடிக்கடி திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். வாமனன் , நிமிர்ந்து நில், தோனி போன்ற திரைப்படங்களில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் சமீபத்தில் திருநாள் என்ற திரைப்படத்திலும் தொகுப்பாளர் கோபிநாத் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நிலவிவரும் ஊரடங்கு உத்தரவால் சினிமா படப்பிடிப்புகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் நடிகர் நடிகைகள் தங்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கின்றனர். பெரும்பாலான நடிகர் நடிகைகள் தங்களின் சமூக வலைதளப் பக்கங்களில் மூலமாக த்ரோபேக் புகைப்படங்கள் அல்லது வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர்.


அந்த வகையில் நீயா நானா கோபிநாத் அவர்களின் திருமண திரைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. இதன் மூலம் கோபிநாத் அவர்களின் மனைவி துர்காவின் புகைப்படம் முதன் முறையாக இணையத்தில் வெளியாகியுள்ளது. கோபிநாத் உடன் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வரும் அவரது மனைவி துர்கா சென்னை அசோக் நகரில் ஒரு எம்பொரியம் நடத்தி வருவதாகவும் அதனுடன் சேர்த்து ஃபொட்டிக் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. உடைகள் தயாரிப்பில் இவரிடத்தில் ஆலோசனைகளை பெற ஒரு கூட்டமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.