தல டைரக்டரின் புது அவதாரம்! அக்சரா, சுனைனா, காயத்ரியின் ஃபின்ங்கர் டிப்!

இயக்குனர் விஷ்ணுவர்தன் பிங்கர் டிப் என்ற வெப் சீரிசை தயாரித்து வருகிறார் .


நடிகை அக்ஷரா ஹாசன், சுனைனா, காயத்ரி, நடிகர் அஷ்வின் போன்ற பல்வேறு நடிகர் நடிகைகள் நடிப்பில் பிங்கர் டிப் என்ற வெப் சீரிசை சிவாகர் இயக்கி வருகிறார் . இந்த வெப் சீரிசை இயக்குனர் விஷ்ணுவர்தன் தயாரித்து வருகிறார்.

இந்த வெப்சீரிஸ் ஜீ5 இணையதளத்தில் வெளியிடப்படும் . இந்த  வெப் சீரிஸ் தொலைபேசி மற்றும் இணையதளம் மூலமாக நடக்கும் பிரச்சனைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது .

இந்த வெப் சீரிஸின் பத்திரிகையாளர் சந்திப்பு வருகிற 19ம் தேதி சென்னையில் உள்ள பிரசாத் லேபில் மதியம் 3 மணி அளவில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .