கருத்துக் கணிப்புகளால் ஏமாறப்போகும் தி.மு.க.! கொதிக்கும் நிர்வாகிகள்

அ.தி.மு.க.வை நிறுவிய எம்ஜிஆர் எப்படி கொடை வள்ளலோ, அவர் வழி வந்த அ.தி.மு.க.வினரும் அப்படித்தான். ஆனால், தி.மு.க.வினரோ அறுத்த கைக்கு சுண்ணாம்பு கொடுக்காதவர்கள் என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் எப்போதுமே உண்டு.


சில ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக இருந்ததை வைத்துக்கொண்டு, எதற்காக வீணாக செலவிட வேண்டும்? என்ற எண்ணத்தில் பெரும்பாலான திமுக வேட்பாளர்கள் பணம் செலவிடாம், கையைச் சுருக்கிக் கொள்வதாகவும், இதனால், பிரசாரம் பெயரளவுக்கே மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்படுகிறது.

கரன்சிகளைக் கண்ணில் காட்டாததால், வேட்பாளர்களைச் சுற்றி வந்த உடன் பிறப்புகள் வெறுத்துப்போய் வீடுகளிலேயே முடங்கிவிட்டதாக பல மாவட்டங்களிலிருந்தும், கட்சித் தலைமைக்கு புகார்கள் அனுப்பப்பட்டதாக சொல்லப்படுகிறது. இது குறித்து ஸ்டாலினின் உறவு புள்ளி, வேட்பாளர்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் போன் போட்டதில், ’’ ஏன்... நாங்களேதான் செலவு செய்யணுமா...?

அதுதான் கட்சி நிதி கோடி கோடியா இருக்குதே... வடநாட்டைச் சேர்ந்த பிரசாந்த் கிஷோருக்கு 300 கோடி, 400 கோடின்னு அள்ளிக் கொடுக்கிறீங்க... சொந்த கட்சிக்காரன் கடந்த 10 வருஷ காலமா கைக்காசைப் போட்டு, கட்சி கூட்டம், நலத்திட்டம்.. அது இது என செலவழிச்சி, இப்ப ஓட்டாண்டியா நிற்கிறான்.. எங்களுக்கு கொடுத்தா என்ன...? நீங்க கொடுத்தா செலவழிப்போம்... இல்லைன்னா நாங்க ஒண்ணும் செய்றதுக்கு இல்லை’’ என சூடாக பதில் வந்ததாம். மேலும் பல தொகுதிகளில் கட்சியினர் உள்ளடி வேலைகளில் ஈடுபடுவதாகவும் புகார்கள் குவிகிறதாம்.

இப்படியெல்லாம் இருந்தா எப்படி ஆட்சிக்கு வர்றது..?