தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பெண்களின் பாதுகாப்பு அம்புட்டுத்தான். அடிச்சுத் தூக்கிய யோகி ஆதித்யநாத்.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க, வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து தேர்நிலைத் திடலில் யோகி ஆதித்யநாத் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.


அப்போது அவர், ‘நான் ராமரின் புன்னிய பூமியான புன்னிய பூமியில் இருந்து வந்திருக்கிறேன். ஆயிரக்கணக்கான கலைஞர்கள் சேர்ந்து டெக்ஸ்டைல் சிட்டி என்ற இந்த கோவை மண்ணை உருவாக்கியுள்ளனர். பலரும் இங்கு கல்விதரத்தை மேம்படுத்த பாடுபட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வணக்கம்.

ராமர் ஆலய கட்டுமானத்திற்கு தமிழக சர்பில் 120 கோடி வழங்கியுள்ளது. அதனால் 130 கோடி மக்கள் சார்பாக தமிழக மக்களுக்கு நன்றி. டிபென்ஸ் காரிடார் கோவையில் அமைய உள்ளது. சுய சார்பு பாரதத்தை பறைசாற்றும் இத்திட்டத்தா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

மத்திய அரசாங்கம் சர்ஜிகல் ஸ்டிரைக் செய்ததது. அப்போது தமிழகத்தை சேர்ந்த அபினந்தன் பாகிஸ்தானில் சிக்கினார். அவரை உயிருடன் மீட்டது மோடி அரசுதான். இந்தியாவில் 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது. மேற்குவங்கம், அஸ்சாமில் நிறைய கூட்டத்தில் கலந்து கொண்டேன். நேற்று கேரளாவிலும் கூட்டத்தில் கலந்து கொண்டேன்.

அதன்படி, அஸ்சாம், மேற்குவங்கம், தமிழகத்தில் எந்த சந்தேகமும் இல்லாமல் வெற்றிபெறுவோம். அனைவருக்குமான வளர்ச்சி என்பது நமது தாரக மந்திரம். தமிழகத்தில் இந்த கூட்டணி புதிய விடியலை நோக்கி செல்கிறது. தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கியுள்ள மோடியை எண்ணிப்பார்க்க வேண்டும்.

பிரதமர் மோடி பல திட்டங்களை 6 ஆண்டுகளில் வழங்கியுள்ளார். இலவச கேஸ், வீடு, பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்ட திட்டங்களுக்கு தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளார்.மேலும், 54 லட்சம் கழிப்பறைகளை கட்டி கொடுத்துள்ளது. மக்கள் நமது தேசிய ஜன நாயக கூட்டணியை ஆதரிக்க வேண்டும்.

தமிழகம் பெண்களுக்கு அதிகாரத்தில் முக்கியத்துவம் கொடுக்கும் மண். பெண்களுக்கு மரியாதை செலுத்தும் மண். பெண் குழந்தைகளுக்கும், மகளிருக்கான முன்னேற்றத்தை நம் கூட்டணியால் மட்டும் தான் தர முடியும்.திமுக, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகும். அவர்கள் பெண்களுக்கு எதிரான நபர்கள். பெண்களுக்கு எதிராக செயல்படும் திமுக கூட்டணியை வளர விடகூடாது.திமுக கூட்டணி ஊழல் மிக்கது.

ஜன நாயகம், பெண்கள், குழந்தைகள் குறித்து கவலை கிடையாது. காமன் வெல்த் ஊழல், நிலக்கரி ஊழல், 2 ஜி ஊழல் என எண்ணற்ற ஊழல்கள் அவர்களது ஆட்சியில் நடைபெற்றது.இவர்களுக்கு ஊழல் செய்வது தான் நோக்கம். தொண்டாமுத்தூர் தொகுதியிலும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை வெற்றி பெற செய்யுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார்.

வர்றவங்க எல்லாம் தி.மு.க.வை போட்டுத் தாக்குறாங்களே... பரிதாபம்தான்.