ஓடும் பேருந்தில் திடீர் நெஞ்சுவலி! தன் உயிரை கொடுத்து பயணிகளை காத்த டிரைவர்! நெகிழ வைத்த சென்னை சம்பவம்!

சென்னை மாநகர பேருந்து ஓட்டுநர், திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை கோயம்பேடிலிருந்து மாமல்லபுரத்திற்கு மாநகர பேருந்தை ராஜேஷ்கண்ணா என்பவர் ஓட்டி சென்றுள்ளார். வேளச்சேரி 100 அடி சாலையில் சென்று கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் ஓரளவுக்கு சிரமப்பட்டு பேருந்தை நிறுத்தினார்.

ஆனால் அப்போது கார் வந்து அவருடைய பேருந்தில் எதிரே வந்த கார் மோதியது. திடீரென்று கார் மோதியதால் அந்த சாலையில் அடுத்தடுத்து பத்து வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டன.

பேருந்தில் பயணம் செய்த பயணிகள் ஓட்டுநர் ராஜேஷ்கண்ணாவை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

ராஜேஷ்கண்ணா பேருந்தை உடனடியாக நிறுத்தியதால் எந்தவித பேராபத்தும் ஏற்படவில்லை. பேருந்தில் பயணித்த பயணிகள் வேறொரு பேருந்தில் சென்றனர்.

இந்த சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.