சுற்றி சுற்றி வந்தன..! மயங்கின! ஊருக்குள் அடுத்தடுத்து செத்து விழுந்த நாய்..! பூனை..! காகங்கள்..! ஊட்டி பீதி!

மர்மமான முறையில் கத்தை கத்தையாக விலங்குகள் உயிரிழந்துள்ள சம்பவமானது குன்னூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நீலகிரி மாவட்டம் குன்னூர் என்ற இடம் அமைந்துள்ளது. இதற்குட்பட்ட ஓட்டுபட்டரை என்னும் இடத்திற்கு அருகே வசம்பள்ளம், வள்ளுவர் நகர், வாசுகி நகர் ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன. கடந்த பல வருடங்களாக இப்பகுதியில் குன்னூர் நகராட்சியின் குப்பை கிடங்கு அமைந்துள்ளது.

இந்த குப்பை கிடங்கில் குன்னூரில் சேகரமாகும் குப்பைகள் அனைத்தும் கொண்டுவந்து கொட்டப்படுகின்றன. குப்பைகளில் உள்ள இறைச்சி கழிவுகளை சாப்பிடுவதற்கு காட்டு பகுதியில் உள்ள விலங்குகளும் பறவைகளும் வந்து இப்பகுதியில் வசிக்கின்றன.

நேற்று காலை வள்ளுவர் நகர் பகுதியில் நாய், பூனை மற்றும் பறவைகள் சில மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தன. மேலும் புதருக்கு அருகே காட்டுப்பன்றி ஒன்று இறந்து கிடந்ததையும் மக்கள் கண்டறிந்துள்ளனர். கிராம மக்கள் உடனடியாக அப்பகுதி காவல் நிலையத்தின் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த காவல்துறையினர் கால்நடை மருத்துவர்கள் உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இறந்த விலங்குகளை உடற்கூறாய்வு செய்து மருத்துவர்கள் மாதிரிகளை பெற்றனர். காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் விஷம் கலந்த உணவை விலங்குகள் கொண்டதாலேயே இறந்திருக்க இயலும் என்று கூறப்படுகிறது.

ஆனால் உடற்கூறு ஆய்வு அறிக்கை வெளியான பிறகே உண்மையான காரணம் தெரியவரும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.