ஓடும் ரயில் முன்பு செல்ஃபி! புதுக்கோட்டை இளைஞனுக்கு நேர்ந்த பயங்கரம்!

புதுக்கோட்டை அருகில் இரயில் வரும் போது அதன் முன்னர் நின்று செல்ஃப்பி எடுக்க இளைஞர்கள் முயன்ற போது இரயில் மோதி சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியான பெரும் சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியது.


புதுக்கோட்டை, பூசத்துறை இரயில் பாலத்தின் அருகே நண்பர்களுடன் அமர்ந்துப் வழக்கம்போல கல்லூரி மாணவர் மணிகண்டன் பேசிக்கொண்டிருந்தார்.அங்கு அந்த வழியாக  மானா மதுரை டூ மன்னார்க்குடி செல்லும் இரயில் வந்துக்கொண்ருந்தது.

எதர்ச்சியாகஇரயில் முன்னர் நின்று செல்ஃப்பி எடுக்க முயன்ற போது மணிகண்டன் மீது இரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவரது நண்பர் மகேந்திரன் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

செல்ஃப்பி எடுக்க முயன்று பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக உலகளவில் செல்ஃப்பிக்காக முயன்று உயிர்பலியாகும் நாடுகளின் வரிசையில் இந்தியா முன்னிலை வகிப்பதாக வெளியான தகவலும் குறிப்பிடத் தக்கது