கல்யாணம் பண்ணிக்குறதா சொன்னார்..! உல்லாசமா இருந்தோம்..! ஆனால் வங்கி பெண் அதிகாரிக்கு காதலனால் ஏற்பட்ட விபரீதம்!

கடலூர் மாவட்டத்தில் திருமணம் செய்து கொள்வதாக பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு ஏமாற்றிய புகாரில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கடலூர் மாவட்டம் புதுப்பாளையத்தை சேர்ந்த விஜயகாந்த் என்ற இளைஞர் செங்கல்பட்டில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். விஜயகாந்த்துக்கும் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த நித்யா என்பவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.

நித்யா சென்னையில் உள்ள ஒரு வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். கடந்த 4 வருடமாக இருவரும் காதலித்து வந்த நிலையில் இருவரும் பலமுறை தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். நித்யா உடனான பழக்கம் புளித்துப்போகவே அவரை தவிர்த்து வந்துள்ளார் விஜயகாந்த். தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த நித்யா திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளார்.

ஆனால் விஜயகாந்த் மறுக்கவே அவர் மீது பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் நித்யா. விஜயகாந்த்தும் நானும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் திருமணம் செய்து கொள்வார் என்ற நம்பிக்கையில் தன்னை அவரிடம் இழந்து விட்டதாகவும் புகார் மனுவில் தெரிவித்தார் நித்யா.

இதையடுத்து ஆய்வாளர் வனஜா, உதவி ஆய்வாளர் சுகன்யா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய விஜயகாந்த்தை கைது செய்தனர். பின்னர் அவர் பண்ருட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைக்த்தனர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ்.