முந்தைய தலைமுறையில் சிறுவர் முதல் பெரியவர் வரையிலும் விரும்பி உண்ணக்கூடியதாக இலந்தைப்பழம் விளங்கியது. இனிப்பும் புளிப்பும் கலந்த இலந்தைப் பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி, டி, சுண்ணாம்புச்சத்து மற்றும் இரும்புச்சத்து நிரம்பியுள்ளது.
இலந்தைப் பழம் சாப்பிட்டால் எலும்புகள் பலம் அடையுமா?
சைனாவில் முதலில் விளைந்ததாக கருதப்படும் இலந்தை அனைத்து வகையான நிலங்களிலும் முளைக்கக்கூடியது. காட்டு இலந்தை, நாட்டு இலந்தை என்ற இரண்டையும் சாப்பிடமுடியும்.
• பித்தத்தை சரிப்படுத்தும் சக்தி இலந்தைக்கு உண்டு. அடிக்கடி வாந்தி, தலைச்சுற்றல் உள்ளவர்கள் இலந்தைப் பழம் சாப்பிட்டால் பித்தம் மட்டுப்படும்.
• சுண்ணாம்புச்சத்து நிரம்பியிருப்பதால் இலந்தையைத் தொடர்ந்து சாப்பிட்டால் எலும்புகளும் பற்களும் வலுவடையும்.
• உடல் வலியைப் போக்கி சுறுசுறுப்பை தரும் தன்மை இலந்தைக்கு உண்டு.
• இலந்தைப் பழம் தொடர்ந்து எடுத்துக்கொள்பவர்களுக்கு உடல் குளிர்ச்சியாக இருக்கும். அத்துடன் செரிமானம் சிறப்பாக நடைபெறும்.
இலந்தையுடன் சுவைக்காக அதிக அளவில் உப்பு அல்லது மிளகாய் பொடி சேர்த்து சாப்பிடுவது உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும்.