அதிகாலையில் எழுந்ததும் ஆரோக்கியமான பானங்களைத் தேர்ந்தெடுத்து குடிப்பதன் மூலம் பல்வேறு நோய்கள் மற்றும் பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்க முடியும். குறிப்பாக ஒருவரது கவனத்தை சிதறச் செய்யும் சிறு ஆரோக்கிய பிரச்சனைகளான தலைவலி, உடல் சோர்வு போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும்.
நாள் முழுக்க மூளை சுறுசுறுப்பா செயல்படணும்னா இதுபோல ஆரோக்யமான நீர்பானம் தான் காலைல குடிக்கணும்!
க்ரீன் ஜூஸ் மூளைக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த வல்லது. க்ரீன் ஆப்பிள் - 2 * செலரி - 6 துண்டுகள் * கேல் கீரை - 8 இலைகள் * எலுமிச்சை - 1/4 * இஞ்சி - ஒரு துண்டு மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் பிளெண்டரில் போட்டு நன்கு அரைத்து, பின் பருக வேண்டும். இந்த பானம் சற்று குடிப்பதற்கு கடினமாகத் தான் இருக்கும். ஆனால் இது மிகவும் ஆரோக்கியமான ஓர் காலை பானமாகும்.
மிளகில் உள்ள கேப்சைசின் என்னும் பொருள், நரம்புகளின் நுனிப் பகுதியை உணர்விழக்கச் செய்துவிடுவதால், மூளைக்கு அனுப்பப்படும் வலி செய்தியானது தடுக்கப்பட்டு, தலை வலி வருவது குறையும். மேலும் கேப்சைசின் ஒற்றைத் தலைவலியை உண்டாக்கும் முக்கிய காரணியின் திறனைக் குறைக்கிறது.
இதனால் ஒற்றைத் தலைவலி பிரச்சனையும் குறையும். எனவே உங்களுக்கு அடிக்கடி தலைவலி வருமானால், தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் சிறிது மிளகுத் தூளை சேர்த்து கலந்து குடியுங்கள்.
ஒருவரது உடலில் பொட்டாசியம் குறைவாக இருந்தால் தான், மந்தத்தன்மை, மனக் குழப்பம் மற்றும் எதிலும் கவனத்தை செலுத்த முடியாத நிலை போன்றவற்றை சந்திக்கக்கூடும். எனவே தர்பூசணியுடன் நீர்ச்சத்து அதிகம் நிறைந்த வெள்ளரிக்காயையும் சேர்த்து எடுத்தால், உடலுக்கு வேண்டிய நீர்ச்சத்து கிடைக்கும்.
தர்பூசணி - 2 நீள துண்டுகள் * வெள்ளரிக்காய் - பாதி * ஐஸ் - 1 கப் * தேன் - 1 டேபிள் ஸ்பூன் * புதினா இலைகள் - 2 மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் பிளெண்டரில் போட்டு நன்கு அரைத்து, உடனே பருக வேண்டும். வேண்டுமானால் இந்த பானத்தை மதிய வேளையிலும் பருகலாம்.
புதினா ஒற்றைத் தலைவலி உள்ளவர்களுக்கு மிகவும் சிறப்பான பொருள். புதினா மற்றும் மூளை குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் கலந்து கொண்டவர்களுக்கு தினமும் புதினா எண்ணெய், புதினா டீ பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. அதன் முடிவில் புதினா எண்ணெயை மற்றும் டீ பயன்படுத்தியவர்களுக்கு நினைவாற்றல் அதிகரித்திருப்பதும், அவர்கள் மூளை வேகமாக செயல்படுவதும் தெரிய வந்தது.
எனவே உங்கள் மூளை ஆரோக்கியமாகவும், சிறப்பாகவும் செயல்பட நினைப்பவர்கள், புதினா டீயை தினமும் குடியுங்கள். அதிலும் காலையில் எழுந்ததும் ஒரு கப் புதினா டீ குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.