பரிதாப மாடுகள்! கண்டு கொள்ள யாரும் இல்லை! அமெரிக்க பால் பண்ணையில் எடப்பாடிக்கு நேர்ந்த பரிதாபம்!

வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் போயிருக்கும் எடப்பாடியார் கோட்டு, சூட்டும் போட்டுக்கொண்டு மாஸ் காட்டி வருகிறார். வேட்டி, சட்டையில் மட்டுமே பார்த்துவந்த மக்களை அசரடிக்கிறது அவரது போஸ்கள்.


வெளிநாடுகளில் பல்வேறு தரப்பினரையும் பார்த்து கலக்கியெடுக்கிறார். அவரது நடையும், உடையும் கொஞ்சமும் வித்தியாசமாக இல்லாமல் இயல்பாக இருப்பது ஆச்சர்யம்தான். இந்த சூழலில் அவரது மாட்டுப்பண்ணை விஜயம்தான் கொஞ்சம் பிசிறடிக்கிறது.

ஏனென்றால் வெளிநாடுகளில் மாட்டுப்பண்ணைகள் விதவிதமாக, வித்தியாசமாக நடத்தி வருகிறார்கள். நம்மூரைப் போலவே வெளியே வைத்து வளர்க்கப்படும் மாடுகளும், ஏசி அறையில் வைத்து வளர்க்கப்படும் மாடுகளும் உண்டு.

அந்த வகையில் இன்று எடப்பாடியாருக்கு நம்மூர் மாட்டுக்கொட்டகை போன்ற மாட்டுப்பண்ணையை சுற்றிக் காட்டியிருக்கிறார்கள். சுகாதாரத்திலும், வளர்ப்பு முறையிலும் பெரிய வித்தியாசத்தைப் பார்க்க முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் அங்கு பார்க்கும் மாடுகள் எல்லாமே நோஞ்சான் மாடுகளாக காட்சியளிக்கிறது.

மாட்டுப் பண்ணையும் நம்மூரைப் போலவெ இருக்கிறது. இதைப் பார்ப்பதற்காக எதற்கு அவர் வெளிநாட்டுக்குப் போக வேண்டும்? நல்ல மாட்டுப்பண்ணையைக் காட்டுங்கப்பா.