நான் அவரை லவ் பண்றேன்னு அவரோட கணவனுக்கே தெரியும்..! தீராத யாரடி நீ மோகினி சீரியல் நடிகை பஞ்சாயத்து!

திடிரென பழகுவதை நிறுத்தியதால் ஒருதலையாய் காதலித்து வந்த நபர் நடிகை மின்னல் தீபாவை தாக்கிய சம்பவம் சென்னையில் படப்பிடிப்பு ஒன்றில் நிகழ்ந்துள்ளது.


`யாரடி நீ மோகினி' தொடரில் நடித்து வரும் நடிகை மின்னல் தீபா மாயி படத்தில் வரும் வாம்மா மின்னல் என்ற நகைச்சுவை காட்சி மூலம் பிரபலம் ஆனவர். அவர் பெயர் தீபா என்றாலும் அந்த படத்தில் பிரபலம் ஆனவுடன் அவர் பெயர் மின்னல் தீபா என்று அடைமொழி வந்துவிட்டது.

சில கருத்து வேறுபாடு காரணமாக தன்னுடைய கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார் நடிகை தீபா. இந்நிலையில் தீபாவின் குடும்பத்திற்கு தெரிந்த நபர் ஒருவர் தீபாவுடன் நட்புடன் பழகி வந்துள்ளார். அவர் மீது எந்த சந்தேகமும் வராத நிலையில் தீபாவும் பழகி வந்துள்ளார். இது குறித்து தீபா கூறும்போது ஆரம்பத்தில் நன்றாக பழகிய நண்பரின் நடவடிக்கைகள் நாளடைவில் மாறத் தொடங்கியது.

என் கணவருடனான பிரச்சனை சீக்கிரமே முடிவுக்கு வந்துவிடும். நாங்கள் பிரிந்திருப்பதை பார்த்து வேண்டுமென்றே எங்கள் குடும்பத்திற்குள் அந்த நபர் நுழைந்துள்ளார். என் கணவரிடம் இருந்து என்னை நிரந்தரமாக பிரிக்க அவர் முயற்சி செய்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. இதனாலே அவருடன் பழகுவதை நிறுத்திவிட்டேன். இதற்கிடையே என்னை திருமணம் செய்து கொள்வதாக உறவினர்களிடம் அவர் சொல்லி இருப்பது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர் திடீரென படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கே வந்து தொல்லை கொடுத்தார். "ஏன் என்னோட பேச மாட்டேங்கிற"ன்னு என்னை கேட்டு என் செல்போனையும் வாங்கி உடைத்தார். மேலும் என்னை காதலிப்பது என் கணவருக்கே தெரியும் என சத்தமாக பேசினார். இதனால் நான் அவமானம் அடைந்தேன். பின்னர் என் கணவர் வந்தவுடன் அங்கிருந்து அந்த நபர் சென்றுவிட்டார் என்று கூறினார் தீபா.

மேலும் குடும்ப நண்பர் என்பதால் புகார் கொடுக்க தயக்கமாக இருப்பதாக கூறும் தீபா பிரச்சனை பெரிதானால் புகார் கொடுப்பதை தவிர வேறு வழியில்லை என கூறினார். இதுகுறித்து தீபாவின் கணவர் கூறியபோது ஒருதலையாக காதலித்து வந்த அந்த நபரை கண்டித்திருக்கிறேன். இனி இந்த பிரச்சனை வராது என கூறினார்.