பெண் டாக்டர் போட்ட ஊசி! 5 மாத கர்ப்பிணி துடிதுடித்து பலியான பரிதாபம்!

பொள்ளாச்சி அருகே டாக்டர் போட்ட ஊசியால் 5 மாத கர்ப்பிணி பரிதாபமாக உயிரிழந்தார்.


பொள்ளாச்சி நெகமம் அரிஜன காலனியை சேர்ந்த கூலித்தொழிலாளி செல்வராஜின் மனைவி வனிதாமணி, 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். ஏற்கனவே இவர்களுக்கு 5 குழந்தைகள் இருந்ததால் 6வதாக உருவான கருவை கலைக்க முடிவு செய்தனர். ஆனால் ஐந்து மாத கருவை கலைக்க அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மறுத்துள்ளனர்.

இதனால் பொள்ளாச்சி வடசித்தூரில் உள்ள “யேகோவாநிஷி ஆயுர்வேதிக் செண்டர்” என்ற  ஆயுர்வேத மருத்துவமனைக்கு வனிதாமணி சென்றுள்ளார். அங்கு மருத்துவர் முத்துலட்சுமி, கர்ப்பிணி வினதாமணிக்கு கருக்கலைப்பு ஊசி போட்டுள்ளார்.

 அடுத்த சில நிமிடங்களில் வலி தாங்க முடியாமல் வனிதாமணி துடித்துள்ளார். இதனால் வேறு மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்ட வனிதா வழியிலேயே உயிரிழந்தார். இதனையடுத்து தலைமறைவான மருத்துவர் முத்துலட்சுமி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஆயுர்வேத மருத்துவம் படிக்காமலேயே மருத்துவம் பார்த்து வந்ததாக புகார் எழுந்துள்ளது.