விஸ்கி செலவு மட்டும் ரூ.8 லட்சம்! கல்யாணத்துக்கு வந்த நண்பர்களை மதுவில் குளிப்பாட்டிய புதுமண ஜோடி! எங்கு தெரியுமா?

மும்பை: திருமண வரவேற்புக்கு வரும் விருந்தினர்களுக்காக ரூ.8 லட்சத்திற்கு விஸ்கி வாங்கி அசத்தியுள்ளனர்.


மும்பையை சேர்ந்த உடித் என்பவர் சைலி என்பவரை திருமணம் செய்ய உள்ளார். இவர்களது திருமண வரவேற்பு வரும் நவம்பர் 14ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, விருந்தினர்களை மகிழ்விக்கவும், அவர்களின் நினைவில் என்றும் நீங்காத இடம்பிடிக்கவும் இந்த ஜோடி திட்டமிட்டது.

இதன்பேரில், உலகம் முழுவதும் 'குடிமகன்'களின் கனவாக உள்ள ஜாக் டேனியல்ஸ் என்ற விஸ்கியை வாங்கி விருந்தினர்களுக்கு பரிமாற இவர்கள் தீர்மானித்தனர். ஆம், ரூ.8 லட்சம் செலவிட்டு, சொன்னதைப் போலவே, ஒரு பேரல் ஜாக் டேனியல்ஸ் விஸ்கியை இவர்கள் ஆர்டர் செய்தும் உள்ளனர். இந்த விஸ்கி பேரலின் உள்ளே சுமார் 225 பாட்டில்கள் இருக்கும் என்றும், இந்த பாட்டில்கள் ஒவ்வொன்றும் ஒரு ஃபிளேவரில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இவற்றை விரும்பும் விருந்தினர்களுக்கு, அந்த பாட்டிலில் அவர்களின் பெயர் பொறித்து தரப்படுமாம். திருமண வரவேற்பு உள்பட தங்களது வீட்டில் இன்னும் சில நாட்களுக்கு நடைபெற இருக்கும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் இதனை பயன்படுத்தி, விருந்தினர்களை போதையில் வைத்திருக்கப் போகிறோம் என்று உற்சாகமாக உடித் தம்பதியினர் தெரிவிக்கின்றனர். இந்தியாவிலேயே முதல் முறையாக திருமண வரவேற்பிற்கு ஒரு பேரல் விஸ்கியை ஆர்டர் செய்தவர்கள் என்ற பெருமையும் இவர்களுக்கு கிடைத்துள்ளது.