கனிமொழியைக் கண்டு அச்சப்படுகிறாரா உதயநிதி ஸ்டாலின்? இளைஞரணிக் கூட்டத்தில் அம்பலமான ரகசியம்!

உதயநிதியை திடீரென கட்சியின் முக்கிய பதவிக்குக் கொண்டுவந்ததில் கனிமொழி கடும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது.


அதனால் ஏதேனும் வகையில் அவரை சரிக்கட்டும் முயற்சிகள் நடந்து வருகின்றன என்று சொல்லப்பட்டது. அது உண்மை என்று நிரூபிக்கும் வகையில் இன்று உதயநிதி தலைமையில் சென்னையில் நடைபெற்ற  திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் விசித்திரமான சம்பவம் அரங்கேறியது. 

ஆம், இன்று நிறைவேறிய முதல் தீர்மானத்தில் கனிமொழி மாமியாரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தி.மு.க. வரலாற்றில் நிர்வாகிகள் மற்றும் நிர்வாகிகளின் ரத்த உறவுக்கு மட்டுமே அஞ்சலி செலுத்தப்படும். இன்று கனிமொழி மாமியார் சுசிலா கோவிந்தசாமிக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதோ, இதுதான் அந்த முதல் தீர்மானம். முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கழக தலைமை நிலையச் செயலாளருமான ஆயிரம் விளக்கு எஸ்.ஏ.எம். உசேன் அவர்கள், புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் ஆர்.வீ.ஜானகிராமன் அவர்கள், விக்கரவாண்டி தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினர் கு.

ராதாமணி அவர்கள், அரியலூர் மாவட்டக் கழக செயலாளரின் தந்தையும், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான எஸ்.சிவசுப்பிரமணியம் அவர்கள், கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் கோவை மு.இராமநாதன் அவர்கள், கழக சொத்து பாதுகாப்புக் குழு துணை தலைவர் ஆர்.டி.சீதாபதி அவர்கள், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் கா.ரா.சுப்பையன் அவர்கள்,

திருநெல்வேலி மாநகர முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி அவர்கள், திமுக மக்களவை துணை தலைவரும், கழக மகளிர் அணி செயலாளருமான கனிமொழி அவர்களின் மாமியார் சுசிலா கோவிந்தசாமி ஆகியோரின் மறைவுக்கு இக்கூட்டம் தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. 

இந்த விவகாரம் கனிமொழிக்கு காட்டப்படும் வெள்ளைக்கொடியாகவே கருதப்படுகிறது. விரைவில் கனிமொழிக்கு என இளம் பெண்கள் பேரவை ஒன்று தொடங்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. எப்படியோ, குடும்பத்தில் சண்டை இல்லாமல் இருந்தால் சரிதான்.