கஞ்சாவை காட்டிக்கொடுத்த பத்திரிகையாளர் உயிருக்கு மதிப்பு இல்லையா..? அதிரடியில் இறங்குமா அரசு..?

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் தாலுகா சோமங்கலத்தை அடுத்த நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழன் தொலைக்காட்சி செய்தியாளர் தம்பி இசுரவேல் மோசஸ் நேற்று இரவு வீட்டில் இருந்த போது தொலைப்பேசி எண் கேட்பது போன்று வெளியில் வரவழைத்து அவரை மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் வெட்டி விட்டு ஓடி விட்டனர். ரத்தக் காயங்களுடன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்தார்


கடந்த வாரம் அதே பகுதியில் நடக்கும் கஞ்சா வியாபரத்தையும், சமூக அவலத்தையும் பற்றி செய்திகளை வெளியிட்டுயுள்ளார். அதன் பிறகு அவருக்கு தொலைப்பேசி வாயிலாக பல கொலை மிரட்டல்கள் வந்துள்ளது. அவரது இதுகுறித்து தந்தை அருகில் உள்ள சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தும் கூட காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இந்த கொடூர படுகொலை என்பது இது வரையில் தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் சந்திக்காத அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஆகும். 

தமிழக காவல் துறை இயக்குநர் நேரிடையாக தலையிட்டு குற்றவாளிகள் உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் அவர்கள் உடனே தம்பி மோசஸ் குடும்பத்தினருக்கு 50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் மற்ற மாநிலத்தில் உள்ளது போலவே பத்திரிகையாளர்களை பாதுகாக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பத்திரிகையாளர்களும், நடுநிலை அரசியல்வாதிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.