தோனி, டு பிளெஸ்ஸிஸ், ஜடேஜா இன்றைய போட்டியில் விளையாடுவார்களா? சென்னை அணி கோச் பிளெமிங் அதிர்ச்சி தகவல்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான ipl போட்டி இன்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கவுள்ளது.


சென்னை அணியை பொறுத்தவரை கடைசி போட்டியில் தோனி , டு பிளெஸ்ஸிஸ், ஜடேஜா களமிறங்கவில்லை. இதனை சென்னை அணி கடைசி போட்டியில் மோசமான தோல்வியை தழுவியது. டு பிளெஸ்ஸிஸ் மற்றும் ஜடேஜா முழு உடல் தகுதியுடன் உள்ளதால் இவர்கள் இருவரும் இன்றைய போட்டியில் பங்கேற்பார்கள் என்று சென்னை அணியின் கோச் பிளெமிங் கூறியுள்ளார். 

மேலும் தோனிக்கு உடல் நிலை முழுவதுமாக சரி ஆகவில்லை. ஆகவே அவர் வலைப்பயிற்சி கூட மேற்கொள்ளவில்லை. ஆகவே இன்றைய போட்டியில் தோனி விளையாடுவாரா மாட்டாரா என்று இன்று மாலை தோனியின் உடல்நிலையை பொறுத்தே தெரியும் என்று அவர் கூறியுள்ளார். 

உலகக்கோப்பை போட்டிகள் நெருங்கவுள்ளதால் தோனி ஓய்வு எடுப்பதே நல்லது என்பதே ரசிகர்களின் எண்ணமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில் வெற்றி பெரும் அணிகள் புல்லிபட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.