எண்ணெய் குளியல் போட்டால் உடல் நாற்றம் தீருமா?

வாரம் ஒரு முறை பெண்ணும், வாரம் இரண்டு முறை ஆணும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை நம் முன்னோர்கள் வலியுறுத்தினார்கள். சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் எண்ணெய் குளியல் முக்கியமானதாக கருதப்படுகிறது.


ஆனால் இன்றைய நவீன நாகரிகயுகத்தில் தீபாவளி அன்று மட்டுமே எண்ணெய் குளியல் நடைபெறுகிறதுதலைக்கு எண்ணெய் வைப்பதும் தேவையில்லை எனும் அளவுக்கு நாகரிகம் வளர்ந்திருக்கிறது.

·         சீரகம் சேர்த்து காய்ச்சிய நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்தால் உடல் சூடுதூக்கமின்மை பிரச்னைகள் குறையும்.

·         மன அழுத்தம்படபடப்புடென்ஷன் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் எண்ணெய் குளியல் போட்டால் பிரச்னை தீரும்.

·         தோல் நோய் குறைந்து சரும ஆரோக்கியம் மேம்படுவதற்கும்உட்ல் பளபளப்படையவும் எண்ணெய் குளியல் பயன்படுகிறது.

·         உடல் முழுவதும் எண்ணெய் தடவுவதால் ரத்த ஓட்டம் சீரடைகிறதுமேலும் உடல் நாற்றம் போன்ற பிரச்னைகள் தீருகிறது.

எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது மட்டும் வெந்நீர் குளியல் நல்லதுமேலும் எண்ணெய் குளியல் அன்று கடினமான வேலைகளை செய்யக்கூடாது.