கணவனை பழிவாங்க மனைவி செய்த காரியம்! வெளியானது அந்தரங்க புகைப்படங்கள்!

ராணுவ வீரருடைய மனைவியுடன் உல்லாசமாக இருக்கும் ரமேஷ் என்பவரின் படங்களை அவரது மனைவியே சமூகவலைதளங்களில் பதிவிட்டு தனது கோபத்தை தணித்துக் கொண்டுள்ளார்.


இருசக்கர வாகன விற்பனை செய்யும் முகவரான ரமேஷ் என்பவர் ராணுவ வீரர் ஒருவருக்கு மோட்டார் பைக் ஒன்றை விற்பனை செய்துள்ளார். வியாபார அளவில் ராணுவ வீரருடன் தொடங்கிய நட்பு நாளடைவில் நண்பர்களாக இருவரையும் மாற்றி உள்ளது.

ராணுவ வீரரின் நண்பராக மாறிவிட்ட ரமேஷ் அவரது மனைவியுடனும் நட்பாக பழகி பேசி வந்தார். ராணுவ வீரர் நாட்டைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட அடிக்கடி எல்லைக்கு சென்று விடுவது வழக்கம். அடிக்கடி ராணுவ வீரர் பணி நிமித்தமாக சென்றுவிட அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி ஏற்கனவே திருமணமான ரமேஷ் ராணுவ வீரரின் மனைவியுடனான பழக்கத்தை மேலும் அதிகரித்துள்ளார்.

நாளடைவில் அவர்களது நட்பு கள்ளக் காதலாக மாறியுள்ளது. ரமேஷூம் ராணுவ வீரரின் மனைவியும் அடிக்கடி வெளியூர் செல்வதும் அங்கு அறை எடுத்து தங்கி உல்லாசமாக இருப்பதும் அதை தங்களது மொபைலில் புகைப்படம் எடுத்து வைத்து ரசிப்பதுமாக தங்கள் கள்ளக் காதலை வளர்த்து வந்துள்ளனர். 

இந்த நிலையில் இவர்கள் ரமேஷூம் ராணுவ வீரரின் மனைவியும் தனிமையில் இருக்கும் அந்தரங்க புகைப்படங்களை கணவரின் மொபைலில் பார்த்த ரமேஷின் மனைவி அதிர்ச்சி அடைந்து உள்ளார்.  மேலும் உயிருக்கு உயிராக நேசித்த கணவர் ரமேஷ் தனக்கு துரோகம் செய்து விட்டு வேறு ஒரு பெண்ணுடம் முறையற்ற வாழ்வு வாழ்ந்து வருகிறாரே என்ற மன வேதனையில் அவரது கணவர் ரமேஷும் ராணுவ வீரரின் மனைவியும் உல்லாசமாக இருக்கும் ஆபாசமான படங்களை சமூக வலைதளமான வாட்சப், பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார்.

இந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பார்த்த அந்த பெண்ணின் நண்பர்கள், உறவினர்கள்  அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இந்த விவகாரம் ராணுவ வீரருக்கு தெரிய வர தன் மனைவி மீது அவதூறாக புகைப்படங்கள் பதிவிடப்பட்டுள்ளதாக ரமேஷின் மனைவி மீது போலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து வழக்குப் பதிந்த போலீசார் ரமேஷ் மனைவியிடம் விசாரித்ததில் அனைத்து உண்மையும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெண்ணின் தனிமையை பயன்படுத்திக் கொண்டு ஆண்கள் அவர்களை வசியப்படுத்தினாலும் பெண்கள் தங்கள் கணவர் தங்கள் வைத்திருக்கும் உண்மையான அன்பை புரிந்துகொண்டு இதுமாதிரியான தவறான செயல்களில் ஈடுபடாமல் இருந்தால் குடும்ப ஜோதி என்றும் அணையாது