தோசை மாவில் விசம்! கணவனை கொடூரமாக தீர்த்துக் கட்டிய மனைவி! அதிர்ச்சி காரணம்!

கணவர் குடித்து விட்டு அடிக்கடி சந்தேகப்பட்டு மனைவியை சித்திரவதை செய்துவந்துள்ளதாக கூறப்படுகிறது. கோபத்தில் தோசையில் மயக்க மருந்து கலந்து கொடுத்து. மனைவியே கணவரை கழுத்தை நெறித்து கொலை செய்து தீர்த்துகட்டியது அம்பலமானது.


புழல், பகுதியில் வசித்து வரும் சுரேஷ் அங்குள்ள கறிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். அவர் 5 வருடங்களுக்கு முன்னதாக அனுஷியா எனவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதில் 4 வயதில் மகனும் இருக்கிறான். 

இந்த நிலையில் அனுசியா அந்த பகுதியின் மெடிக்கல் ஷாப்பில் வேலை பார்த்து வந்துள்ளார், அவர் அடிக்கடி போனில் அதிக நேரம் பேசுவதாகவும், தனது மனைவிக்கு வேறு யாருடனாவது பழக்கம் இருக்கலாம், எனவும் சந்தேகித்த சுரேஷ். குடித்து விட்டு மனைவி அனுஷியாவை கண்டபடி அடித்து உதைக்க இருவருக்கும் அடிக்கடி வாக்கு வாதம் வரும் என அக்கம் பக்கமும் சொல்கின்றனர். 

இதற்கிடையில் மனைவி அனுஷியா ஒரு கட்டத்தில் சுரேஷ் கொடுமைகள் தாங்க முடியாமல் , மயக்க மருந்து கலந்த தோசையை சம்பவத்தன்று கொடுத்து, அவரை கட்டிலில் படுக்க வைத்து விட்டு தனது நெருங்கிய நண்பரான முரசொலி மாறன் என்பவரை வரவழைத்து , கணவன் என்றும் பாராமல் இருவரும் சுரேஷை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளனர். 

மேலும் மறு நாள் காலையில் கணவர் மது போதையில் இறந்து போனதாக நாடகமாடிய அனுஷியாவை போலீசார் விசாரணை செய்ததில் அவர் தான் கொலை செய்துள்ளார் என்பது அம்பலமானதை அடுத்து, அனுஷியா மற்றும் முரசொலி மாறன் இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.