இளம் கள்ளக்காதலனுக்கு ரூ.20 லட்சம் செலவு செய்த போலீஸ்காரர் மனைவி! கண்டுபிடித்த பிறகு நேர்ந்த தரமான சம்பவம்!

சென்னை: கள்ளக்காதலனுக்காக, ரூ.20 லட்சம் செலவு செய்த மனைவியை போட்டு தள்ளிய கணவன் கைது செய்யப்பட்டார்.


சென்னை செம்பியம் காவலர் குடியிருப்பில் வசிப்பவர் பிரேம்நாதன் (37). கொத்தவால்சாவடி போலீஸ் நிலையத்தில் டிராபிக் போலீசாக பணிபுரியும் பிரேம்நாதனுக்கு, அர்ச்சனா (32) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். 

இந்நிலையில், கடந்த சில நாட்களாக, கணவன், மனைவி இடையே கடும் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த சூழலில், அர்ச்சனாவை, இரும்புக் கம்பியால் பிரேம்நாதன் அடித்துக் கொன்றார். இதன்பேரில், உடனடியாக,செம்பியம் போலீசார் வழக்குப் பதிந்து, பிரேம்நாதனை கைது செய்தனர். அவரிடம் விசாரித்தபோது, ''என் மனைவிக்கும்,  ஒரு இளைஞனுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது.

இதை நான் பலமுறை கண்டித்தேன். என் பேச்சை அவர்கள் சட்டை செய்யவில்லை. இதுதவிர, அந்த இளைஞனுக்காக, உறவினர்களிடம் ரூ.20 லட்சம் வரை கடன் வாங்கி, அர்ச்சனா கொடுத்திருக்கிறாள். இதுபற்றி நான் கேட்டபோது, அவள் என்னிடம் சண்டையிட்டாள். ஆத்திரம் தாங்காமல் இரும்புக்கம்பியால் அடித்துக் கொன்றேன்,'' என, தெரிவித்துள்ளார்.