என் புருசன் இனி உனக்கும் புருசன்! கணவனுக்கு வேறு பெண்ணை திருமணம் செய்து வைத்த மனைவி!

ஒடிசாவில் கணவர் வேறொரு பெண்ணை காதலிப்பதை அறிந்த மனைவி அவர்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் அந்த ஊர் மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


ஒடிசா மாநிலம், கமர் பள்ளியை கிராமத்தை சேர்ந்த ராம கபாசி - காயத்திரி தம்பதியினர் திருமணம் ஆகி குடும்ப வாழ்க்கையை நடத்தி வந்துள்ள நிலையில்,  தனது கணவர் ராம கபாசி வேறு ஒரு இளம் பெண்ணை காதலித்து வருவதாக மனைவி காயத்திரிக்கு தெரியவந்துள்ளது.

இது குறித்து பலர் அவரிடம் சொன்னபோதும் அமைதியாக இருந்த மனைவி, ஒரு கட்டத்தில் கணவர் ராம கபாசி ஆயிதி என்ற இளம் பெண்ணை உண்மையாக காதலிப்பதாக , சொந்த மனைவியிடமே வந்து சொல்ல, அமைதியாக இருந்துள்ளார் காயத்திரி.

இந்த நிலையில் , மனைவி காயத்திரி தனது சொந்த கணவருக்கு அவர் விரும்பிய பெண்ணையே திருமணம் செய்து வைத்துள்ளார், அவரே முன் நின்று எல்லா ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.

இதனை கண்டு அதிர்ந்து போன உறவினர்கள் கேள்வி கேட்டாலும் கண்டுக்கொள்ளாத காயத்திரி, தனது கணவர், அவரது காதலி என மூவரும் தற்போது ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.