கணவனுக்கு உணவில் மயக்க மருந்து கொடுத்துவிட்டு காதலனுடன் உல்லாசம்! திடீரென விழித்ததால் மனைவியால் ஏற்பட்ட கொடூரம்!

திருச்சி மாவட்டம் முசிறி அருகே கூலித் தொழிலாளி ஒருவர் மர்ம முறையில் இறந்து கிடந்த வழக்கில், அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.


திருச்சி முசிறியில் இருந்து தா.பேட்டை செல்லும் சாலை ஓரம், அடையாளம் தெரியாத நபரின் சடலம் மூன்று நாட்களுக்கு முன்னர் கிடந்தது. விசாரணையில் அவர் முசிறி அருகே சிந்தம்பட்டியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பது தெரியவந்தது.

லோடுமேனாக வேலை பார்த்து வந்த கோவிந்தராஜ் மரணம் குறித்து அவரது மனைவி செல்வியிடம் விசாரணை  மேற்கொண்டனர். அப்போது மனைவி செல்வி முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார். பின்னர் போலீசார் தங்கள் பாணியில் விசாரித்த போது உண்மை வெளியானது.

செல்வி கோவிந்தராஜ் தம்பதிக்கு ஒரு மகன், இரு மகள்கள் உள்ள நிலையில், செல்விக்கு பக்கத்து வீட்டைச் சேர்ந்த தங்கதுரை என்பவருடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.   கணவர் உண்ணும் உணவில் தூக்க மாத்திரையைக் கலந்து கொடுத்து விட்டு செல்வியும், தங்கதுரையும் உல்லாசமாக இருப்பது வழக்கம்.

 ஒரு நாள் திடீரென விழிப்பு வந்த கணவன் தனது மனைவி தங்கதுரையுடன் உல்லாசமாக இருப்பதை பார்த்து அதிர்ந்துள்ளார். இதனால் பதற்றம் அடைந்த செல்வி, தங்கதுரையுடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்துள்ளார். 

இதை அடுத்து இரவோடு இரவாக கோவிந்தராஜின் உடல் வனப்பகுதியில் வீசப்பட்டுள்ளது. செல்வியின் வாக்குமூலத்தை அடுத்து அவரையும், தங்கதுரையையும் முசிறி போலீசார் கைது செய்துள்ளனர்.